Advertisment

வெளியான அதிக நன்கொடை வழங்கியோர் பட்டியல்: முதல் இடத்தில் சிவ நாடார்

எடல்கிவ் ஹுருன் இந்தியா என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், ஏழைகளுக்கு அதிக அளவில் உதவி செய்வோர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் 2024ஆம் நிதியாண்டுக்கான நன்கொடையாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Roshini Nadar Malhotra is the new chief of HCL Tech

முதலிடத்தை பிடித்தார் ஹெச்சிஎல் நிறுவனர் சிவ நாடார்

எடல்கில் ஹுரூன் இந்தியா என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஏழைகளுக்கு அதிக அளவில் உதவி செய்வோர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2024-ம் நிதியாண்டுக்கான நன்கொடையாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதில் ஹெச்.சி.எல், டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவ நாடார் முதலிடத்தில் உள்ளார்.

Advertisment

இவரது குடும்பம் 2024 நிதியாண்டில் மட்டும் ரூ.2.153 கோடி நிதியை நன்கொடையாக வழங்கியுள்ள நிலையில் இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்த பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். 

நாட்டின் பெரும்பணக்காரராக கருதப்படும் முகேஷ் அம்பானி ஆண்டுக்கு 407 கோடி ரூபாய் நன்கொடையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

நன்கொடையாளர் பட்டியலில் முதல் பத்து இடங்களில், குமாரமங்கலம் பிர்லா குடும்பத்தினர், கௌதம் அதானி குடும்பம், நந்தன் நிலேகனி, கிருஷ்ணா சிவுகுலா, அனில் அகர்வால், சுஷ்மிதா மற்றும் சுப்ரடோ பக்ஷி, ரோகிணி நிலேகனி ஆகியோரும் உள்ளனர். 

இந்த ஆண்டு 203 பேர் பட்டியயில் இடம்பெற்றுள்ளனர் இதில 96 பேர் புதிய நன்கொடையாளர்கள் அவர்கள் மட்டும் ரூபாய் 8.783 கோடி நன்கொடை அளித்துள்ளனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 19 சதவீதம்  அதிகம் ஆகும்.

தனிப்பட்ட நபர்களின் நன்கொடையை மட்டும் கணக்கில் கொண்டாலும், சிவ நாடார் ரூ.1.982 கோடி நன்கொடை அளித்து முதலிடத்தில் உள்ளனர். இந்த நன்கொடையாளர்களில் 6 பேர் தங்களது நன்கொடையை கல்விக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Money Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment