நாம் அனைவருக்கும் வியர்க்கிறது, ஆனால் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் (hyperhidrosis) நோயால் கண்டறியப்பட்டவர்கள் அசாதாரணமாக அதிகப்படியான வியர்வை அனுபவிக்கிறார்கள்.
இவர்களுக்கு உடல் உழைப்பு எதுவும் இல்லை என்றாலும் அல்லது வெப்பத்திற்கு வெளிப்படும் பணிகளில் ஈடுபடாவிட்டாலும் கூட அதிகமாக வியர்க்கும். குறிப்பாக அக்குள், முகம், கழுத்து, முதுகு, இடுப்பு, பாதங்கள் மற்றும் கைகள் போன்ற பகுதிகளில் இது ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதை விளக்கிய டாக்டர் ராஜேஷ் குமார், இரண்டு வகையான ஹைப்பர்ஹைட்ரோசிஸ் உள்ளன. (முதன்மை ஹைப்பர்ஹைட்ரோசிஸ், இரண்டாம் நிலை ஹைப்பர்ஹைட்ரோசிஸ்) மேலும் இது பொதுவாக ஒரு அடிப்படை நிலையின் விளைவாகும்.
ஹைப்பர்ஹைட்ரோசிஸ் காரணங்கள்
ஹைப்பர்ஹைட்ரோசிஸில், உங்கள் உடலின் வியர்வை சுரப்பிகள் மிகையாக செயல்படுகின்றன, இது உங்களை அதிகமாக வியர்க்க வைக்கிறது, சில நேரங்களில், பதட்டம் போன்ற ஒரு மருத்துவ நிலை அதிகப்படியான வியர்வையைத் தூண்டும்.
ஈரமான உள்ளங்கை, ஈரமான உள்ளங்கால், அடிக்கடி வியர்த்தல் மற்றும் ஆடைகள் நனைக்கும் அளவுக்கு வியர்ப்பது ஆகியவை பொதுவாகக் காணப்படும் அறிகுறிகளாகும்.
அதிகமாக வியர்ப்பது பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரிப்பு அல்லது வீக்கம், உடல் துர்நாற்றம் மற்றும் தோல் நிறமாற்றத்துக்கு வழிவகுக்கும்.
இது ஒரு தீங்கற்ற நிலை என்றாலும், ஹைப்பர்ஹைட்ரோசிஸ் அதன் உளவியல் மற்றும் உணர்ச்சி அடிப்படைகள் காரணமாக வாழ்க்கைத் தரத்தை மோசமாக்கும். கடுமையான வியர்வை உங்கள் நாளை சீர்குலைத்து, சங்கடத்தை ஏற்படுத்தும்.
ஹைப்பர்ஹைட்ரோசிஸ் நோய் எப்படி கண்டறியலாம்?

அதிகமாக வியர்ப்பது அடிப்படை நிலைமைகளின் காரணமாக இருக்கலாம், எனவே உங்கள் சுகாதார நிபுணர் காரணத்தைக் கண்டறிய உதவும் சில சோதனைகளை பரிந்துரைக்கலாம்.
ஸ்டார்ச்-அயோடின் சோதனை
இதில், உங்கள் சுகாதார நிபுணர் வியர்வையால் பாதிக்கப்பட்ட பகுதியில் அயோடின் கரைசலைப் பயன்படுத்துகிறார், பிறகு அதன் மேல் ஸ்டார்ச் தெளிக்கிறார். அதிகப்படியான வியர்வையின் போது இந்த சொல்யூஷன் அடர் நீலமாக மாறும்.
காகித சோதனை
இதில் வியர்வையை உறிஞ்ச பாதித்த பகுதியில் சிறப்பு காகிதத்தை வைக்கிறார். பின்னர், நீங்கள் எவ்வளவு வியர்த்தீர்கள் என்பதைத் தீர்மானிக்க காகிதத்தை எடைபோடுகிறார்கள்.
சிகிச்சை
நிபுணரின் கூற்றுப்படி, முதன்மை ஹைப்பர்ஹைட்ரோசிஸுக்கு எந்த சிகிச்சையும் இல்லை, மேலும் சிகிச்சையானது அறிகுறிகளைக் குறைப்பதை மையமாகக் கொண்டுள்ளது. அடிப்படை பிரச்சனை தணிந்தால், இரண்டாம் நிலை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் அல்லது மருந்துகளை பரிந்துரைக்கலாம்:
*அடிக்கடி குளிப்பது அல்லது சுவாசிக்கக்கூடிய துணிகளை அணிவது
*வியர்வை சுரப்பிகளை அடைக்க வியர்வை எதிர்ப்பு மருந்துகள்
* வாய்வழி மருந்துகள்
*போடோக்ஸ் ஊசி
வியர்வை எதிர்மறையாக உங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது, செயல்களைத் தவிர்க்கச் செய்கிறது, காலப்போக்கில் மோசமாகிறது என்றால் ஒரு சுகாதார நிபுணரை அணுக வேண்டும் என்று டாக்டர் குமார் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil