நடிகை சமந்தா தனது முன்னாள் காதலன் குறித்து துணிச்சலாக மனம் திறந்து பேசியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் இப்போதைய டாக் ஆஃப டவுன்.
ஷம்மு என்று கோலிவுட் ரசிகர்களாக செல்லமாக அழைக்கப்பட்ட நடிகை சமந்தா சென்ற வருடம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கரம் பிடித்தார். திருமண வாழ்வில் பிஸியாக இருந்த போதும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்காக திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில்சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியாகியது. இதில் சம்ந்தா பத்திரிக்கயாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் கீர்த்தியின் நடிப்பின் பெருமளவில் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
அதே சமயம் படத்தில் இடம்பெற்ற ஜெமினி கணேசனின் கதாபாத்திரம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தது. குறிப்பாக காதல் மன்னான ஜெமினி, படத்தில் சாவித்திரிக்கு குடிபழக்கம் சொல்லி கொடுப்பத்தில் தொடங்கி கடைசியில் சாவித்திரியை பிரிந்து விட்டு செல்வது வரை படத்தில் அவரை காட்டப்பட்ட காட்சிகளை அவரின் குடும்பத்தார் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் தான் நடிகை சமந்தா படத்தில் காட்டப்பட்டது சாவித்திரியின் கதை மட்டுமில்லை . என்னுடைய கதையும் தான் என்று வெளிப்படையாக பேசி பகீர் கிளப்பியுள்ளார். சமந்தா பேசியதாவது, “ நடிகையர் திலகம் படத்தில் காண்பித்த ஜெமினி கணேசன் கதாபாத்திரம் போலவே என் வாழ்க்கையிலும் ஒருவர் இருந்தார். நல்லவேளை நான் அவரை விட்டு விலகிவிட்டேன். இல்லையெனில் என் சினிமா வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுமே பாதிக்கப்பட்டு இருக்கும்.
நான் அவரை கண்மூடித்தனமாக காதலித்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சரியான நேரத்தில் அவரை நான் பிரியாமல் இருந்திருந்தால் சாவித்திரி அம்மாவிற்கு ஏற்பட்ட நிலை தான் எனக்கும் ஏற்ப்பட்டிருக்கும். அதன் பின்பு தான் வாழ்க்கையில் உண்மையான காதலரான நாகசைதன்யாவை சந்தித்தேன். மணம்முடிந்தேன்” என்று கூறியுள்ளார்.
சமந்தா திருமணத்திற்கு முன்பு ஏற்கனவே, சினிமா நடிகர் ஒருவரை காதலித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவரின் பெயரை வெளிப்படையாக கூறாமலே சமந்தா இத்தகைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.