காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தனது சகோதரரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியுடனான உறவு முதல் தனது குழந்தைகளுக்கு வீட்டுப் பாடங்களுக்கு உதவுவது வரை – பிரியங்கா நேரலை உரையாடலின் போது அனைத்தையும் வெளிப்படுத்தினார்.
இன்ஸ்டாகிராம் நேரலையின் போது, ஒரு பயனர்’ பிரியங்காவிடம், உங்கள் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவி செய்வீர்களா என்று கேட்டார். அதற்கு பிரியங்கா, நான் இன்னும் என் குழந்தைகளுக்கு அவர்களின் வீட்டுப்பாடத்திற்கு உதவுகிறேன் என பதிலளித்தார்.
“என் மகள் இன்று காலை என்னை அழைத்து, அவளது பணிகளில் ஒன்றைச் சரிபார்க்கும்படி கேட்டுக் கொண்டாள். நான் எனது குழந்தைகளுக்கு மட்டும் வீட்டுப்பாடம் செய்ய உதவவில்லை, அவர்களின் நண்பர்களுக்கும் உதவுவேன். குழந்தைகள் உதவி கேட்டு வரும் அத்தைகளில் நானும் ஒருவள். சில நேரங்களில், நான் நாள் முழுவதும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவேன், அந்த சமயங்களில் காலை 4 மணி வரை விழித்திருந்து, எனது குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்களில் உதவுவேன், ”என்று பிரியங்கா கூறினார்.
அம்மா சோனியா காந்தி,
மேலும் நீங்களும், ராகுல் காந்தியும் குழந்தைப் பருவத்தில் சண்டையிட்டீர்களா என்ற கேள்விக்கு, பிரியங்கா இப்படி கூறினார். “அந்த சண்டைகளில் ராகுல் தான் எப்போதும் வெற்றி பெறுவார். நாங்கள் நிறைய சண்டையிட்டோம். என் பாட்டி படுகொலை செய்யப்பட்டபோது எனக்கு 12 வயது. அந்த நேரத்தில் நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். அவள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, நாங்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. 12 வயது முதல் 18 வயது வரை வீட்டில் இருந்தே படித்து தேர்வு எழுதினேன்.
நாங்கள் மற்ற குழந்தைகளுடன் தொடர்புகொள்வது நிறுத்தப்பட்டது. என் அப்பா அதிகம் பயணம் செய்தார், எங்கள் அம்மா அவருக்குத் துணையாக சென்றார். அதனால் நானும், ராகுலும் தனியாக வசித்து வந்தோம். இந்த தனிமையில், நாங்கள் ஆழமான நட்பை வளர்த்துக் கொண்டோம், ஆனாலும் நிறைய சண்டையிட்டோம்.
“இருப்பினும், வெளியாட்கள் எங்களுடன் சண்டையிட வரும்போதெல்லாம், நாங்கள் அவர்களுக்கு எதிராக அணி சேர்வோம். சில சமயங்களில், நாங்கள் சண்டையிடுவதைத் தடுக்க எங்கள் தந்தை தலையிட வேண்டியிருந்தது, ”. இவ்வாறு பிரியங்கா இன்ஸ்டாகிராம் நேரலையின் போது கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “