Advertisment

நீண்ட நாட்கள் அழகாக இருக்க இதுதான் ரகசியம் : அம்மா, பாட்டி சொன்ன அந்த விஷயம்: நடிகை நயன்தாரா பேட்டி

நாம் தொடர்ந்து நமது சருமத்தை பராமரிப்பது மூலமாகத்தான், நாம் ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை பெற முடியும் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
nayan

நாம் தொடர்ந்து நமது சருமத்தை பராமரிப்பது மூலமாகத்தான், நாம் ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை பெற முடியும் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Advertisment

நடிகை நயன்தாரா தற்போது 9ஸ்கின் என்ற அழகு சாத பொருட்களை விற்கும் புதிய நிறுவனத்தை தொடங்கி உள்ளார். சருமத்தை அழகாக்கும் பொருட்களின் பிராண்டுகள்  தற்போது முன்பை விட அதிகரித்துள்ளது. நடிகை தீபிகா படுகோன் நடத்தும் 82 டிகிரி இ ( 82°E )  , கத்ரீனா கைஃப்யின் கைய ப்யூட்டி ( Kay Beauty) , கிருத்தி சனோனின்  ஹைபன் ( Hyphen)  போன்ற மிகப் பெரிய  பிராண்டுகள் ஏற்கனவே இருக்கும் நிலையில், நயன்தாரா தனது பிராண்டை அறிமுகப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு கொடுத்த நேர்காணலின் தொகுப்பு.

தனியாக ஒரு அழகு சாதன பொருட்களை விற்கும் பிராண்டை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது?9ஸ்கின் பிராண்டை உருவாக்க காரணம் இருக்கிறது. நம்மை நாம் கவனித்துக்கொள்ளவும், சுயம் சார்ந்த வளர்ச்சியை எட்டவும் எங்கள் பிராண்டின் பொருட்கள் உதவும். பல்வேறு வகையான சருமத்திற்கு தேவையான விஷயங்களை ஒரே அழகு சாதனப் பொருளில் கொண்டு வந்துள்ளோம். மேலும் வாடிக்கையாளர்கள் கேட்கும் தனித்தன்மையான தேவைகளை எங்கள் பிராண்டின் பொருட்கள் பூர்த்தி செய்யும்.

உங்கள் சருமத்தை பராமரிக்க எப்பொதும் மேற்கொள்ளும் இரகசிய வழிமுறை என்ன?நாம் தொடர்ந்து நமது சருமத்தை கவனித்துகொள்ள வேண்டும். சருமத்திற்கு ஏற்றவாறு, தரமான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். முகத்திற்கு பயன்படுத்தும் பவுண்டேஷன், நமது சருமத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அப்போதுதான் ஒளி வீசுகின்ற தோற்றம் கிடைக்கும்.

வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் அழகு குறிப்புகளை பற்றி சொல்ல முடியுமா?

தொடர்ந்து சருமத்தை பராமரிக்க வேண்டும் என்பதால் சில அழகு சாதனப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவேன். இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து பேஸ் மாஸ்க் பயன்படுத்துவேன்.

சருமத்தை பராமரிக்கும் விஷயத்தில் உங்களின் பார்வையை செதுக்கியது யார்?

எனது அம்மா மற்றும் பாட்டி சொன்ன விஷயங்கள்தான் சருமத்தை பரமாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை செதுக்கியது. தலைமுறையாக பரிமாறப்பட்ட தகவல்கள், இயற்கையாக கிடைக்கும் பொருட்களின் முக்கியதுவத்தை தெளிவுப்படுத்தியது. மிகவும் எளிமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

உங்களது ஓய்வற்ற பணிகள் நிறைந்த சூழலில், உடல் ரோக்கியத்தை கவனித்து கொள்ள நேரம் ஒதுக்க முடிகிறதா?

அதிக பணிகள் இருந்தாலும் உடல் பயிற்சி செய்ய நேரத்தை ஒதுக்கிவிடுவேன். நேரத்தை சரியாக திட்டமிட்டுக்கொள்வேன். யோகா செய்வேன். அதுபோல தசைகளை வலுவாக்க, ,அதிக நேரம் புத்துணர்வுடன் இருக்க உடல் பயிற்சி செய்வேன்.

உங்களை கவனித்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால், எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?

ஓய்வு எடுக்க முன்னிரிமை வழங்வேன். புத்தகம் படித்தால், மனத்திற்கு புத்துணர்வாக இருக்கும். பணிச் சுமை, மற்றும் அழுத்தத்தை குறைக்க தியானம் செய்வேன். நடைபயிற்சி செய்வது. நான் நேசிக்கும் நபர்களுடன் நேரம் செலவழிப்பதை செய்வேன்.

இணையதளத்தில் உங்களை விமர்சிக்கும் அல்லது ட்ரோல் செய்யும் விஷயத்தை எப்படி கையாள்வீர்கள்?

இதை சமாளிப்பது கடினமான ஒன்றுதான். பொதுவாக வெளியில் இருந்துதான் அதிக எதிர்மறை சிந்தனைகள் வரும். இதனால் என்னை சுற்றி எனக்கு துணையாக இருக்கும் குடும்பம், நண்பர்கள், மற்றும் ஊழியர்களை வைத்துகொள்வோன். அவர்கள் சரியான முறையில் விமர்சனங்களை முன்வைப்பார்கள்.

வாழ்நாள் முழுவதும் இந்த அழகு சாதனப் பொருளை மட்டும் பயன்படுத்துவேன் என்றால் எதை தேர்வு செய்வீர்கள்?

சூரிய ஒளியில் இருந்து நம்மை காப்பாற்றும் சன் ஸ்கிரீனைதான் முக்கியமாக பார்க்கிறேன். நல்ல தரமான சன் ஸ்கிரீன் பயன்படுத்தினால் முன்பே வயதாவதை தடுக்கும். மேலும் சருமம் சேதமடையாமல் பார்த்து கொள்ளும்.   

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment