scorecardresearch

விஜய் அங்கிள் கூட ஜோடியா நடிக்கணும்’ களவாணி தங்கச்சி மனிஷா!

எனக்கு சின்ன வயசுல இருந்தே விஜய் அங்கிள் ரொம்ப பிடிக்கும். இப்போ வரைக்கும் அவரை மாமா தான் சொல்லிட்டு இருக்கேன். அவரோட பைத்தியம்னே சொல்லலாம்.

விஜய் அங்கிள் கூட ஜோடியா நடிக்கணும்’ களவாணி தங்கச்சி மனிஷா!
I want to act with vijay uncle kalavani movie sister fame manisha priyadharshini

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான களவாணி படம், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதில் விமலின் தங்கையாக’ நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் மனிஷா பிரியதர்ஷினி..  அதன்பிறகு,  ரகளைபுறம், மத்தாப்பு, மறுமுனை, களவாணி என சில படங்களில் நடித்தார். மேலும் 25க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் மனிஷா, தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது; நான் இப்போ எல்.எல்.பி.ஹான்ஸ் 3ஆம் ஆண்டு படிக்கிறேன்.

நான் பி.எஸ்சி விஸ்காம் கோல்ட் மெடலிஸ்ட். படிப்புல சின்ன வயசுல இருந்தே நேஷனல் ராங் ஹோல்டர். அதனால படிப்பு பொறுத்தவரைக்கும் பிரச்சனை இல்லை. நல்லா படிக்கிறேன். அதேமாதிரி நடிப்புலயும் தங்கச்சி கேரெக்டர்ல எப்படி நல்ல பேர் வாங்கினேனோ’ அதே மாதிரி ஹீரோயினா நடிச்சு, ஒரு நேஷனல் அவார்ட் வாங்கணுங்கிறது என்னோட கனவு.

எனக்கு சின்ன வயசுல இருந்தே விஜய் அங்கிள் ரொம்ப பிடிக்கும். இப்போ வரைக்கும் அவரை மாமா தான் சொல்லிட்டு இருக்கேன். அவரோட பைத்தியம்னே சொல்லலாம். அவங்க கூட சைல்ட் ஆர்டிஸ்டா நடிக்கிறதுக்கு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனா நான் எதுவுமே பண்ணல. நிறைய தங்கச்சி கேரெக்டராவே வந்தது. ஆனா, அவர அண்ணன் கூப்பிட்டு என்னால நடிக்க முடியாது.

அவர மாமானு கூப்பிட்டு பழகிட்டேன். அண்ணன் கூப்பிட்டா, மறுபடியும் அவரோட ஹீரோயினா பண்ண முடியாதுங்கிறதால, நான் அந்த படம் எதுவுமே பண்ணல. அவர்கூட ஹீரோயினா நடிக்கிறது என்னோட லட்சியம்.

எனக்கு அம்மா மட்டும் தான். அப்பா இருந்தும், இல்லாத மாதிரிதான் சொல்லனும். அம்மா தான் எனக்கு எல்லாமே. அம்மாவுக்கு பேபி ஷாலினி ரொம்ப பிடிக்கும். அவங்கள பாத்து பிடிச்சுதான் என்ன ஆக்டிங் கொண்டு வந்தாங்க. அதனால படிப்புலயும் சரி, ஆக்டிங்லயும் என்னோட முதுகெலும்பு என் அம்மா தான்.

என்னதான் அம்மா, நடிப்புக்குள்ள என்னை கொண்டு வந்தாலும், போகபோக நடிப்பு எனக்கு பிடிச்சு போச்சு.. அம்மா நான் அவுங்க வயித்துக்குள்ள இருக்கும்போதே என் பொண்ண கலெக்டராக்கனும் இருந்தாங்க..

அப்போ நான் அம்மாகிட்ட ’உங்க ஆசைப்படி நான் கலெக்டர் ஆயிடுவேன். அதேமாதிரி சினிமாவுல நான் ஒரு நடிகையா சாதிக்கனும். அதுக்கு நீங்க எனக்கு முழு சப்போர்ட் கொடுக்கனும் சொன்னேன். இதுவரைக்கும் அம்மா எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க.. அதே மாதிரி நானும் படிப்புல முதலாவது வந்துட்டு இருக்கேன். நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர்.. கல்லூரியில பகுதி நேரமா, நடன ஆசிரியரா வகுப்பு எடுக்கிறேன்.

எனக்கு களவாணி படம் எப்போவுமே மறக்க முடியாது. டைரக்டர் சற்குணம், இளவரசு சார், சரண்யா மேம், விமல் எல்லாருமே ரொம்ப அன்பா பழகுனாங்க. அப்போ நான் சின்ன பொண்ணு. எல்லாமே எனக்கு பாத்து பாத்து சொல்லித் தருவாங்க.

சரண்யா மேம் கூட, பெரிய ஆர்டிஸ்ட் மாதிரியே நடந்துக்க மாட்டாங்க.. நான் ஷூட் இல்லாதப்போ எப்படி புத்தகம் எடுத்து படிச்சிட்டு இருப்பேனோ, அதேமாதிரி அவங்களும் ஷூட் இல்லாதப்போ’ எம்பிராய்ட்ரி, ஸ்டிச்சிங் வேலைலாம் பாப்பாங்க.. நேரத்தை வீணடிக்க மாட்டாங்க. அப்போ, சரண்யா மேம் என்கிட்ட நீ நல்லா படிக்கணும். பெரிய ஆளா வரணும் சொல்லுவாங்க. நீ மத்த கிளாஸ் போறமாதிரி டெய்லரிங்கும் கத்துக்க சொன்னாங்க. இப்போ நான் டெய்லரிங் கத்துக்கிட்டு இருக்கேன்.

இவ்வளவு வருஷம் கழிச்சும், களவாணி தங்கச்சி ராஜிய இன்னும் யாரும் மறக்கல.. அதுக்காக நான் டைரக்டர் சற்குணம் சார், புரொடியூசர்க்கு ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். அதேபோல ஹீரோயினா இதேமாதிரி ஒரு பேர் வாங்கணும். இதுதான் என்னோட ஆசை.

இப்போதைக்கு என் குடும்பத்துல ரொம்ப தேவைகள் இருக்கு. பொருளாதார ரீதியா நாங்க ஏழையாதான் இருக்கோம். படிப்பு பொறுத்தவரைக்கும் நான் இப்போவரை மெரிட்ல தான் படிக்கிறேன். இப்போ பாரத் இன்ஸ்டிடியூட் ஆஃப் லா- லதான் எல்.எல்.பி படிக்கிறேன். முதல் வருட ஃபீஸ் மட்டும் எங்க சிஸ்டர் கட்டுனாங்க. இப்போது 2வது, 3வது வருஷ ஃபீஸ் கட்டுறதுக்கு நாங்க, இலவச படிப்புக்காக கேட்டுருந்தோம். இப்போ அதுவும் நாங்க பாக்கறோம்னு காலேஜ்ல சொல்லிருக்காங்க.

அதேமாதிரி ஐ.ஏ.எஸ் வகுப்புகளுக்கு சென்னை பொருத்தவரை எல்லாருமே ரொம்ப பண அடிப்படையில தான் இருக்காங்க. அதனால டெல்லி போனா, நல்லா இருக்கும் யோசிச்சோம். இப்போ அதுவும் அரசாங்க நிறுவனத்துல இலவசமா வகுப்புக்கு போயிட்டு இருக்கேன்.

ஆனா, படிப்புக்கு தேவையான புக்ஸ், நோட்ஸ் வாங்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, நடிப்பு, படிப்பு ரெண்டையுமே எப்படியும் பேலன்ஸ் பண்ணிடுவேன்.

கடின உழைப்பு என்னைக்குமே தோல்வியடையாது. நமக்கு எது தேவையோ, நம்மளோட முழு கவனத்தையும் அதுலேயே வச்சு, முயற்சி செய்ஞ்சா நாம எது நினைக்கிறோமோ அது கண்டிப்பா கிடைக்கும். அதனால எதுலயுமே கவனத்தை மிஸ் பண்ணாம கடின உழைப்பு கொடுத்துட்டே இருங்க. விடாமுயற்சி எப்போவுமே வெற்றிதான் தரும் என மன உறுதியுடன் பேசுகிறார் களவாணி சுட்டி தங்கச்சி மனிஷா பிரியதர்ஷினி..

தினமலர் யூடியூப் சேனலுக்கு மனிஷா பேட்டியளித்த வீடியோ இதோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: I want to act with vijay uncle kalavani movie sister fame manisha priyadharshini

Best of Express