scorecardresearch

‘மக்களுடன் பிணைப்பை ஏற்படுத்த எனது லென்ஸைப் பயன்படுத்துவேன்’ – பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான்

Raihan Rajiv Vadra photography exhibition Tamil News: தனது புகைப்படம் மூலம் மக்கள் மீது கவனம் செலுத்த விரும்புகிறேன் என பிரியங்கா காந்தி வாத்ராவின் மகன் ரைஹன் ராஜீவ் வத்ரா குறிப்பிட்டுள்ளார்.

I will use my lens to connect with people says Priyanka Gandhi’s son Raihan

 Priyanka Gandhi Vadra’s son Raihan Rajiv Vadra Tamil News: “எனது வாழ்க்கை எதை நோக்கி பயணப்படுகிறது எனத் தெரியவில்லை. ஆனால் மக்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்த எனது லென்ஸை நிச்சம் பயன்படுத்துவேன்” என்கிறார் பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான். அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்து, புகைப்படம் எடுப்பது தான் தனது முழு மூச்சு என செயல்பட்டு வருபவர் தான், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ராவின் மகன் ரைஹன் ராஜீவ் வத்ரா.

டெல்லியில் பிறந்த ரைஹன் தனது பள்ளிப்படிப்பை டேராடூன் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் படித்தார். தற்போது புகடைப்படம் எடுப்பதில் காதல் கொண்ட இவர் நேற்று திங்கட்கிழமை புது டெல்லியில் உள்ள பிகானேர் ஹவுஸில் ஒரு மாபெரும் புகைப்பட கண்காட்சியை நடத்தியிருந்தார். இந்த புகைப்படக் கண்காட்சிக்கு ‘இருண்ட கருத்து: ஒளி, இடம் மற்றும் நேரத்தின் ஒரு வெளிப்பாடு’ (Dark Perception: An Exposition of Light, Space and Time) என்ற தலைப்பிட்டிருந்தார்.

ரைஹன்புகைப்படம் எடுப்பதற்கென தனி பெற்றாரா என்ற கேள்விக்கு, அந்த இளைஞன், குழந்தையாக இருந்தபோது தனது தாயிடமிருந்து சில டிப்ஸ்களை பெற்றேன் எனவும், நியூயார்க்கில் இரண்டு வாரங்களுக்கு கோர்ஸ் சென்றேன் எனவும் குறிப்பிடுகிறார்.

“நான் 10 வயதில் புகைப்படம் எடுக்க தொடங்கினேன். என்னைக் மிகவும் கவர்ந்தது வானமும் வானம் சார்ந்த நிலமும் தான். எனவே தான் எனது ஆரம்ப புகைப்படங்கள் காடு மற்றும் வனவிலங்குகளை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளன.

பின்னர், நான் எனது கல்விக்காக லண்டனுக்குச் சென்றதும், காடுகளை பார்ப்பது சிரமமாக இருந்ததும், எனது படங்களின் தன்மையும் மாறியது, வீதி புகைப்படம் எடுத்தல், நிகழ்வு புகைப்படம் எடுத்தல் மற்றும் வாழ்க்கையின் புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட எண்ணற்ற வரம்பிற்குள் நுழைந்தேன்.

நான் சிறுவனாக இருந்தபோது புகைப்படம் எடுப்பது பற்றி என் அம்மா எனக்கு சில குறிப்புகள் கொடுத்தார். நான் நியூயார்க்கில் உள்ள சர்வதேச புகைப்பட மையத்தில் இரண்டு வார படிப்பு மேற்கொண்டேன். ஆனால் நான் அடிப்படையில் சுய பயிற்சி பெற்றவன். நான் புகைப்படம் எடுப்பதில் முதுகலைப் பட்டம் படிக்க முயன்று வருகிறேன்” என்று ரைஹான் கூறினார்.

ரைஹான் தனது புகைப்பட கண்காட்சியின் தலைப்பு குறித்து கருத்து தெரிவிகிகையில், ‘இருள், பிரச்சினைகள் குறித்த முழு முன்னோக்கை வழங்குகிறது’ என்றார்.

“இருட்டில் எந்த தீர்ப்பும் இல்லை, உங்கள் எண்ணங்களை உருவாக்க நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள்” இருள் சுதந்திரம் மற்றும் கருத்து சிறை.

எனது புகைப்படங்களில் நான் காணும் விதத்தில் உலகை பிரதிபலிக்க முயற்சிக்கிறேன், .. ஒளி, இடம் மற்றும் நேரம் தொடர்ந்து தங்களை மாற்றியமைத்து கற்பனை மற்றும் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் ஒரு உலகில் நான் வாழ்கிறேன்,” என்று அவர் கூறினார்.

ஏற்கனவே ஒரு தொழில்முறை புகைப்பட நிபுணராகத் தொடங்கியுள்ள ரைஹான், இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிர்வகிப்பதோடு, உட்புற வடிவமைப்பு, உணவு, பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகள் மற்றும் கட்டிடக்கலை தொடர்பான வணிக புகைப்படப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

புகைப்படம் எடுக்கும் போது தனது மிகப்பெரிய உத்வேகம் வாழ்க்கையையும் அவரது பாடங்களையும் பல கோணங்களில் காண்பிப்பதாக கூறியுள்ள ரைஹான், “எனது வேலையில் நான் சேர்க்க விரும்புவர்கள் மக்கள் தான். அடுத்த முறை நான் எனது படைப்பைக் காண்பிக்கும் போது, ​​நீங்கள் மக்கள் மீது அதிக வேலைகளைப் பார்ப்பீர்கள். உருவப்படங்களும் கூட்டமும் நான் வேலை செய்யவிருக்கும் சில விஷயங்கள், ”என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது ஐபோன் உட்பட வெவ்வேறு கேமராக்களைப் பயன்படுத்தி, தனது ஆர்வத்திற்காக ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் செலவிட்டு வருகிறார். அதோடு தனது இந்த புகடைப்பட கண்காட்சி வரும் 17 வரை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

தனது மகனின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, “என் மகன் தனது சொந்த பாதையை கண்டுபிடித்து தனது இலக்குகளை நோக்கி கடுமையாக உழைத்ததற்காக பெருமைப்படுகிறேன்” என்றுள்ளார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: I will use my lens to connect with people says priyanka gandhis son raihan