என்னுடைய பணத்தையே எடுக்கவிடாமல் தொந்தரவு செய்த வங்கி : சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் வாழ்வில் நடந்த சோகக்கதை!!!

இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 101-வது ரேங்கை பிடித்தவர் தான்  சிவகுரு பிரபாகரன். விவசாய குடும்பத்தைன்சேர்ந்த இவர், ஏழ்மையை தாண்டி படித்து, இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நிமிர்ந்து நிற்கிறார்.

ஆனால், இந்த இடத்தை அவர் பிடிக்க  செய்த முயற்சிகள்,  போட்ட  உழைப்புகள், சந்தித்த அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை.  படித்தால் மட்டும்  ஐ.ஏ.எஸ் ஆக முடியும் என்று ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு மாணவர்களும் நினைத்து இருக்கின்றனர்.  ”அப்படி தான் நானும்  நினைத்து இருந்தேன். ஆனால்  இந்த படிப்பை நான் பெற எவ்வளவு அவமானங்களை சந்திக்க வேண்டும் என்று அந்த நாள் தான் தெரிந்துக் கொண்டேன்” என்று தனியார் வங்கி ஒன்றின் டார்ச்சரால் தான் பட்ட கஷ்டத்தை  பொறுக்க முடியாமல் விவரித்துள்ளார் சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ்.

தன் வாழ்க்கையில், தனியார் வங்கிடம் மாட்டிக் கொண்டு  சிவக்குரு சந்தித்த பிரச்சனைகள் கொஞ்சம் நஞ்சமில்லையாம்.  இத்தனை ஆண்டுகள் உழைத்து  படித்து, இந்த இடத்தை பிடித்த பின்பு, அந்த நிகழ்வுகள் மட்டும் அவரின் நினைவில் இருந்து மறையவில்லையாம். இதோ அவரின் வாழ்க்கையில் நடந்த அந்த மோசமான தருணம்.

” ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். எல்லா இளைஞர்களும் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்திருப்பார்கள். அப்படி என் வாழ்க்கையில் இருந்த ஒரே நோக்கம் ஐஏஎஸ் ஆவது தான். ஆசிரியர் பயிற்சியை முடித்த பின்பு,  சொல்லிக் கொள்ளும்படி எந்த வேலையும் கிடைக்கவில்லை.பணப் பிரச்சினை துரத்திய போதும், என் கனவுகளைத் துறக்க மறவில்லை. என்னுடைய 29 வயதில், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.

இந்திய நிர்வாக சேவையில் சேரத் தயாரானேன். இந்த இடத்தை நான் பெற எனது விடாமுயற்சியும், உறுதியும், கடின உழைப்பும் மிக முக்கியமான காரணம்.  சரியாக 2008 ஆம் ஆண்டு முன்னணி பொதுத்துறை வங்கி ஒன்றில், ரூ. 76,000 கல்விக்கடன் பெற்றேன்.  நான் வேலைக்கு  சென்ற பின்பு அந்த கடனை அடைத்து விடுகிறேன் என்று வங்கியிடம் தெரிவித்திருந்தேன்.  ஆனால், அவர்கள் எனக்கு கொடுத்த டார்ச்சர்  வெளியில் சொல்ல முடியாத கொடுமை.

கடனை உடனடியாக  திருப்பிச் செலுத்த வங்கி  மீண்டும் மீண்டும்  என்னை தொந்தரவு செய்தது.  வங்கி அதிகாரிகளின் நடத்தை மிகவும் முரட்டுத்தனமாகவும் இருந்தது.  ஆனால் இவற்றையெல்லாம் கடந்தால் தான் சாதிக்க முடியும் என்ற எண்ணம் எனக்குள் ஆழமாக இருந்தது. ஒருமுறை  நான் சிவில் சர்வீஸ் நேர்காணலுக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்போது செலவுக்கு என் நண்பர் என் வங்கிக் கணக்கில் ரூ. 10,000  அனுப்பினார். ஆனால் நான் கல்விக் கடன் கட்டாததால் வங்கி நிர்வாகம் அந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கூட என்னால் எடுக்க முடியாத அளவிற்கு  பிளாக் செய்தது.  நான்  வங்கியிடம் சென்று முறையாக கேட்டேன்.

இன்னும் சில நாட்களில் பணத்தை திருப்பி தந்து விடுவேன். இந்த ஒருமுறை மட்டும் என்னுடைய பணத்தை  எடுக்க அனுமதியுங்கள் என்றுக் கூட கெஞ்சினேன் ஆனால்,  வங்கி நிர்வாகம் என் கோரிக்கையை  பொருட்படுத்தவே இல்லை.

வங்கி நிர்வாகம் அவர்களின் கடைமையை தான் செய்தார்கள் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவர்கள் நடந்துக் கொண்ட விதமும், கடன் வாங்கிய ஒரே காரணத்திற்காக எவ்வளவு டார்ச்சர் செய்ய முடியுமோ செய்தது தான் சகித்துக் கொள்ள முடியாத ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

 

×Close
×Close