/tamil-ie/media/media_files/uploads/2020/03/template-2020-03-19T155116.469.jpg)
ICICI Bank, yes bank, ICICIStack, Coronavirus pandemic, digital account opening, loan solutions, payment solutions, investments, insurance
ஐசிஐசிஐ வங்கி கடந்த செவ்வாய் கிழமை ICICI Stack ஐ தொடங்குவதாக அறிவித்தது. இது பல்வேறு பிரிவுகளில் உள்ள வாடிக்கையாளர்களுகான டிஜிட்டல் வங்கி சேவைகள் மற்றும் APIs (Application Programme Interface) ன் ஒரு விரிவான தொகுப்பாகும். நோவல் கொரோனா தொற்று காரணமாக மக்களை வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வலியுறுத்தும் வேளையில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வங்கி தெரிவித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
டிஜிட்டல் முறையில் வங்கி கணக்கு துவங்குவது, கடன் தீர்வுகள், பணம் செலுத்தும் தீர்வுகள் (payment solutions), முதலீடுகள், காப்பீடு மற்றும் பராமரிப்பு தீர்வுகள் (care solutions) உள்ளிட்ட சுமார் 500 சேவைகள் இந்த ICICIStack ல் உள்ளன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக முன்பு மனித தலையீடு தேவைப்பட்ட பல சேவைகள் இப்போது end-to-end டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
பல சேவைகள் இத்துறையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவை உடனடியாக வங்கியின் கைபேசி ஆப் மற்றும் இணையதள வங்கி மேடையில் கிடைக்கின்றன என வங்கி தெரிவித்துள்ளது. கணக்கு அடுக்கு (Accounts stack), கட்டண அடுக்கு (payments stack), கடன் அடுக்கு (loans stack), முதலீடு அடுக்கு (investment stack) மற்றும் பராமரிப்பு அடுக்கு (care stack) முதலிய பல்வேறு சேவைகள் டிஜிட்டல் முறையில் கிடைக்கின்றன. இதன் காரணமாக சில்லறை வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் (retail customer / merchants), சில்லறை விற்பனையாளர்கள், தொழில் வல்லுனர்கள் (professionals), fintechs, start-ups, e-commerce players மற்றும் கார்ப்பரேட்டுகள் முதலிய வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாக செல்லவேண்டியதில்லை.
‘ICICIStack’ என்பது ஒரு வங்கியால் நாட்டில் கிடைக்கும் மிக விரிவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகும் என ஐசிஐசிஐ வங்கியின் executive director Anup Bagchi தெரிவித்துள்ளார். அனைத்து டிஜிட்டல் வங்கி சேவைகளும் ஒரே மேடையிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த சில வருடங்களாக நாங்கள் ‘ICICIStack’ ஐ உருவாக்கினோம். கடந்த சில வாரங்களாக வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக நாங்கள் ‘ICICIStack’ ல் வாடிக்கையாளர்களுக்காக சில புதிய சேவைகள் மற்றும் அம்சங்களை சேர்த்துள்ளோம். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் எங்கள் வங்கி சேவைகளை தடையில்லாமல் பயன்படுத்தலாம், எனறு அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us