ஃபேஷன் டிசைனர்.. சினிமா ஹீரோயின்.. டாப் சீரியல் ஆக்டர்.. இதயத்தை திருடாதே சஹானா பர்சனல் ப்ரொஃபைல்!

Colors Tamil Serial Actress: ஃபேஷன் டிசைனிங் முடித்துள்ள பிந்துவுக்கு நல்ல பொட்டிக் ஷாப் திறக்க வேண்டும் என்பது ஆசையாம்.

hima bindhu

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் இதயத்தை திருடாதே. இந்த தொடரில் நாயகியாக நடிப்பவர் சஹானா. இவரது பெயர் ஹிமா பிந்து. ஆந்திராவை சேர்ந்தவர். பி.காம் படித்துள்ளார். பின்னர் பேஷன் டிசைனிங் முடித்துள்ளார். சிறு வயதிலிருந்தே ஆக்டிங், டான்ஸ் மீது ரொம்ப ஆர்வம். இவருடைய அப்பா தமிழ் சினிமாவில் இருந்துள்ளார். தாத்தா, பாட்டி ரெண்டு பேருமே சினிமா ஆர்டிஸ்டுகள் தான். கல்லூரி இறுதியாண்டு படித்து வந்தபோது சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு சினிமா வாய்ப்புகள் வந்தபோது பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்த சொன்னதால் மறுத்துள்ளார்.

சினிமாவில் முதல் என்ட்ரி காலேஜ் படிக்கும்போது ‘ஐஆர் 8’ங்கிற படம் தான். அதில் ஹீரோயினாக நடித்துள்ளார். பிறகு கலர்ஸ் தமிழ் சேனலின் இதயத்தை திருடாதே வாய்ப்பு வந்தபோது நடிக்க ஆரம்பித்தார். சஹானா என்ற ரோலில் நடித்து நல்ல ரீச் ஆனார். கலர்ஸ் மராத்தியில் ஹிட்டான ஜிவ் ஜலா ஏடே பிசா சீரியலை ரீமேக் செய்தே இதயத்தை திருடாதே சீரியலை கலர்ஸ் தமிழ் ரிலீஸ் செய்தது. வழக்கமான கதைக்களத்துடன் இல்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக `கல்யாணம்’ என்ற பெயரில் இருவரின் வாழ்க்கை பகடைக்காயாக்கப்படும் கதையாக இருந்தது இதயத்தை திருடாதே. சிவா மற்றும் சஹானா ஆகிய இருவருக்கும் இடையேயான காதல் இந்த சீரியலுக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்தது.

600 எபிசோடுகளை கடந்து சீசன் 1 முடிவடைந்த நிலையில் தற்போது சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடித்த நவீன் குமார் மற்றும் ஹிமா பிந்து ஆகியோர் சிவா மற்றும் சஹானாவாக தொடர்கின்றனர். இந்த சீரியல் மூலம் ஹிமாவுக்கு மிகப் பெரிய அடையாளம் தமிழ் ரசிகர்களிடையே கிடைத்துள்ளது. இந்த சீரியலுக்கு முன்பு வெப் சீரிஸில் நடித்துள்ளார். ஐந்து நாட்கள் மட்டும் ஷூட்டிங் சென்றவர் நடிப்பை கொஞ்சம் கற்றுக்கொண்டாராம். முதல் சீரியலே பிந்துவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார் ஹிமா பிந்து. இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஷூட்டிங் ஸ்பாட் ஃபன் வீடியோக்கள், ரீல்ஸ் என ஆக்டிவாக உள்ளார். சீரியலில் நடிக்கும் சஹானா கேரக்டர் தான் பிந்து கேரக்டராம். நிஜத்திலும் சஹானாவுக்கு சமையல் தெரியாதாம். அம்மாதான் இவருடைய மிகப் பெரிய ரோல்மாடல் எல்லாம். ஃபேஷன் டிசைனிங் முடித்துள்ள பிந்துவுக்கு நல்ல பொட்டிக் ஷாப் திறக்க வேண்டும் என்பது ஆசையாம். தமிழ் சினிமாவில் நல்ல படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Idhayathai thirudathey colors tamil sahana hima bindu biogrphy

Next Story
வாழைப் பழம், தயிர்… காலையில் இந்த உணவு ஏன் முக்கியம் தெரியுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com