அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக உள்ள இடியாப்பத்தை செய்வதற்கான எளிய செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
பச்சரிசி மாவு - 1 1/2கப்,
தண்ணீர் – 1/2 கப்,
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - ஒரு மூடி
உப்பு - தேவையான அளவு,
நெய் அல்லது நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் ஒன்றரை கப் இடியாப்ப மாவுடன் தேவையான அளவு உப்பு போட்டுப் பிசைந்துகொள்ளவும். பிறகு, சிறிது சிறிதாக தண்ணீர்விட்டு மாவை நன்றாகப் பிசைந்து கொள்ளவும். நாம் பிசையும் மாவு மென்மையாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு அவை கையில் ஒட்டக்கூடாத பதத்திற்கும் இருக்க வேண்டும். இந்த மாதிரியான பதத்துக்கு அவை வந்த பிறகு, மாவை இடியாப்ப அச்சில் வைத்து இட்லித் தட்டில் பிழியவும்.
பிறகு, அவற்றை 5 நிமிடங்களுக்கு இட்லியை வேக வைப்பது போல ஆவியில் வேகவைக்க வேண்டும். அவை நன்கு வெந்த பிறகு கீழே இறக்கி கொள்ளலாம். நாம் அவற்றை சாப்பிடும்போது நாட்டுச்சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஒரு டீஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.நாம் தயார் செய்து வைத்துள்ள சூடான இடியாப்பத்துடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“