Advertisment

இட்லி புசுபுசுன்னு இருக்கணுமா? ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியை மறக்காதீங்க!

How to make soft Idli in tamil: பஞ்சு போன்ற இட்லி தயார் செய்வதற்கான ஈஸியான டிப்ஸ்களை இங்கு வழங்கியுள்ளோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Idli recipe in tamil: How to make soft Idli in tamil

Idli recipe in tamil: இந்திய உணவுகளில் மிகவும் புகழ் பெற்ற உணவாக இட்லி உள்ளது. அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. சூடான இட்லிகளை சில வகை சட்னிகளுடனும், வீட்டில் வைக்கும் குழம்புகளுடனும் சேர்த்து சுவைத்தால் திருப்தியான உணவு உண்பதற்கு ஈடாக இருக்கும்.

Advertisment

அப்படிப்பட்ட இட்லிகளை சில சமயங்களில் மிருதுவானதாக சமைக்க முடியவில்லை. மிருதுவானதாக சமைக்க மாஜிக் ஒன்றும் தேவையில்லை இங்கே வழங்கப்பட்டுள்ள சில ஈஸியான டிப்ஸ்களை முயற்சித்தாலே போதும்.

மிருதுவான மற்றும் புசுபுசு இட்லிகளுக்கு என்ன செய்யலாம்?

மிருதுவான மற்றும் புசுபுசு இட்லிகளை தயார் செய்ய, இட்லி மாவு அரைக்கும் போதே அவற்றுடன் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து அரைக்க வேண்டும். இது தவிர, 4 பங்கு இட்லி அரிசிக்கு 1 பங்கு உளுந்து, 1 ஸ்பூன் வெந்தயம், 1 ஸ்பூன் வெள்ளை அவல் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைத்து அரைக்க வேண்டும்.

இட்லி சுடும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவை

இட்லி அவிக்க எப்போதுமே காட்டன் அல்லது பருதியிலான துணிகளை பயன்படுத்துவது நல்லது. அவற்றை மீண்டும் பயன்படுத்தும் முன்னர் நன்கு துவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைக்க வேண்டும்.

இட்லி மாவு ஒட்டாமல் இருக்க, மாவு ஊற்று முன்னர் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலக்கி விட்டு அரைக்க வேண்டும்.

இட்லி அவித்து எடுக்க அதிகபட்சம் 15 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் போதுமனானது.

இட்லி நன்கு வெந்த பிறகு, அவற்றை வெளியில் எடுக்கும்போது சிறிதளவு தண்ணீரை மேலே தெளித்து எடுப்பது மிகவும் நல்லது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Lifestyle Food Recipes Tamil Lifestyle Update Healthy Food Tamil News 2 Healthly Life Healthy Breakfast Recipe Idli Recipe Tamil Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment