Idli Tamil News, idli Soft Tips Tamil Video: இட்லி, மகத்துவம் மிகுந்த உணவு. அனைவரும் விரும்பக்கூடிய உணவுதான் என்றாலும், குழந்தைகளுக்கும் வயதான பெரியவர்களுக்கும் உயிர் காக்கும் உணவாக இது திகழ்கிறது. தென் இந்திய உணவு வகைகளில் இட்லியை நாம் தவிர்க்கவே முடியாது.
Advertisment
இந்த இட்லியில் அனைவரின் விருப்பம், மல்லிகைப் பூ போல இட்லி மிருதுவாக இருக்க வேண்டும் என்பதே! அது எப்படி இட்லியை மிருதுவாக சமைப்பது? தொடர்ந்து படியுங்கள்.
Idli Soft Tips: மிருதுவான மல்லிகைப் பூ இல்லி
புஸு புஸுன்னு இட்லி உப்பிக்கொண்டு வரவேண்டும் என நீங்கள் நினைத்தால், இட்லி அரிசியை பயன்படுத்துங்கள். அல்லது, பாரா பாயில்டு அரிசியையும் பயன்படுத்தலாம். இது சமைப்பதற்கு எளிமையாக இருக்கும். சத்துக்களும் நிறைந்தது.
Advertisment
Advertisements
இட்லி மாவு தயாரிக்க உடைத்த அல்லது முழு உளுந்து தான் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு உளுந்து பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு நல்லது. இரண்டு கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்து சேர்த்துக் கொள்வது சரியாக இருக்கும்.
சிலர் அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் சேர்த்து ஊற வைப்பார்கள். அது சரியல்ல. தனித்தனியாக ஊற வைத்து செய்தால் இட்லி மென்மையாக வரும். மாவு அரைக்க பயன்படுத்தும் இயந்திரங்களை பொருத்தும்கூட இட்லியின் தன்மை மாறுபடும். வெட் கிரைன்டர் பயன்படுத்துவது நல்லது. இது அரிசி மற்றும் உளுந்தை மிகவும் மென்மையாக அரைத்துவிடும். இதனால் இட்லியும் மல்லிகைப் பூ போல கிடைக்கும்.
மிக முக்கியம், அரிசி, உளுந்து ஆகியவற்றுடன் வெந்தயத்தையும் சிறிதளவு ஊறவைத்து அரைத்து கொள்ளவும். இவை இட்லியை மிருதுவாக்கும். இப்படி மிருதுவான இட்லியுடன் தேங்காய் சட்னி, சாம்பார் வைத்துச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"