செம்ம சுவையான குலோப் ஜாமுன், ஒருமுறை இப்படி செய்யுங்க.
தேவையான அளவு பொருட்கள்
1 கப் இட்லி மாவு
1 கப் ரவை
1 கப் சர்க்கரை
`1 கப் தண்ணீர்
கொஞ்சம் புட் கலர்
5 ஏலக்காய் பொடித்தது
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு மற்றும் ரவையை சேர்த்து கிளரவும். குறிப்பாக மாவு புளிக்காமல் இருக்க வேண்டும். உப்பு சேர்க்காமல் இருக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கிளரவும். தொடர்ந்து புட் கலரை சேர்க்கவும். ஏலக்காய் இடித்ததை சேர்க்கவும். தொடந்து 4 நிமிடங்கள் வரை கிளரவும். அடுப்பை அணைக்கவும். தொடர்ந்து எண்ணெய் சூடானதும், சிறிய உருண்டைகளாக மாவு சேர்த்து பொறித்து எடுக்கவும். தொடர்ந்து, சீராவை இதில் ஊற்ற வேண்டும்.