நாம் எவ்வளவு முயற்சித்தாலும் இட்லி சாஃப்ட்டாக வராது. இந்நிலையில் இந்த பொருளை மட்டும் சேர்த்து அரைத்தால் இட்லி மிகவும் சாஃப்ட்டாக வரும்.
தேவையான பொருட்கள்
1 கப் அளவு முழு உளுந்து ( 200 கிராம்)
1 கப் அளவு அவல் ( 200 கிராம் )
¼ டேபிள் ஸ்பூன் வெந்தயம்
2 கப் இட்லி அரிசி ( 400 கிராம்)
தேவையான அளவு உப்பு
செய்முறை : ஒரு பாத்திரத்தில் உளுந்து, அவல் இரண்டையும் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும். கழுவிய பிறகு இரண்டும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும். தொடர்ந்து வேறொரு பாத்திரத்தில் இட்லி அரிசியை எடுத்து கொள்ள வேண்டும். அதை நன்றாக கழுவியதும். அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும். தொடர்ந்து இட்லி அரிசி முழுவதும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். இதையும் நன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும். 3 மணி நேரம் கழித்து அவல் மற்றும் உளுந்தை தண்ணீரை நீக்கிவிட்டு, மிக்ஸியில் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். தொடர்ந்து இட்லி அரிசியை நன்றாக தண்ணீர் விட்டு அரைத்துகொள்ள வேண்டும். இவை இரண்டையும் கலந்து, உப்பு சேர்க்க வேண்டும். 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். தொடர்ந்து வழக்கம் போல் இட்லி சுட்டு எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“