இட்லி மாவு வைத்து மிகவும் ஈசியா போண்டா செய்ய முடியும். இந்த ரெசிபியை டிரை பண்ணிபாருங்க.
தேவையான பொருட்கள்
1 கப் இட்லி மாவு
3 ஸ்பூன் அரிசி மாவு
3 ஸ்பூன் ரவை
உப்பு தேவையான அளவு
சோடா உப்பு
1 வெங்காயம்
2 பச்சை மிளகாய்
கருவேப்பிலை கொஞ்சம்
கொத்தமல்லி இலைகள் கொஞ்சம்
10 மிளகு இடித்தது
எண்ணெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக்கொள்ளவும். அதில் அரிசி மாவு, ரவை சேர்த்து, தேவையான அளவு உப்பு, சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை நறுக்கியதை சேர்த்து கொள்ள வேண்டும். கொத்தமல்லி இலைகள் நறுக்கியதை தொடர்ந்து அதில் மிளகை இடித்து சேர்த்துகொள்ள வேண்டும். பொறிக்கும் அளவிற்கு எண்ணெய் எடுத்துகொண்டு, அதில் போண்டா சுட்டு எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“