ஒரு வாரம் வரை புளிக்காமல் இட்லி, தோசை மாவு இருக்க சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்துங்கள். அரிசியை 4 மணி நேரம் ஊற வையுங்கள். உளுந்து 3 மணி நேரம் ஊற வைத்தால் போதும். அதோடு வெந்தயம் கொஞ்சம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
கிரேண்டரில் மாவு அரைப்பதற்கு முன்னர் ஒரு முறை நன்கு கழுவி வைத்து விடுங்கள். அரிசி மற்றும் உளுந்து குறைந்தது 3 மணி நேரம் நன்றாக ஊற வேண்டும்.
உளுந்தை அரைக்கும்போது கை படாமல், சில்வர் கரண்டி அல்லது மரக் கரண்டியை பயன்படுத்த வேண்டும். மேலும் மாவு அரைக்கும்போது ஐஸ் வாட்டரை பயன்படுத்த வேண்டும்.
உளுந்து அரைத்து முடித்ததும் கைகளை ஒருமுறை சுத்தம் செய்துவிட்டு. அந்த மாவை எடுத்து வைக்கவும். அரிசியை ஐஸ் வாட்டரில் ஊற வைத்துவிடுங்கள் அதை அரைக்கும்போது மட்டும் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
அரிசியை அரைக்க அதிக நேரம் எடுத்துகொள்ள வேண்டாம். வெறும் 15 நிமிடங்கள் போதுமானது. அரிசி அரைந்ததும் அந்த மாவை எடுக்காமல், அதில் ஏற்கனவே அரைத்து வைத்திருந்த உளுந்தையும் சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். 5 முதல் 7 நிமிடங்கள் வரை அரைத்துகொள்ளவும்.
முடிந்த வரை கைபடாமல் இந்த மாவை எடுத்து வைத்துகொள்ளுங்கள். சில்வர் பாத்திரத்தைவிட பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் மாவு நீண்ட நாள் புளிக்காமல் இருக்கும்.
நமக்கு எப்போது வேண்டுமோ அப்போது வெளியே எடுத்து உப்பு சேர்த்து தோசை சுடவும். மேலும் தோசை, இட்லி சுடுவதற்கு 3 மணி நேரம் முன்பே எடுத்து வெளியே வைத்துவிடுங்கள். அப்போதுதான் தோசை சுட சரியாக இருக்கும்.
மாவு அதிகம் புளித்தால் அதில் பால் அல்லது அரிசி மாவு கலந்து தோசை சுட்டால் மிகவும் சுவையாக இருக்கும். புளிப்பு சுவை தெரியாது. மேலும் மாவு அரைக்கும்போது ஐஸ் வாட்டரை எப்போதும் பயன்படுத்த வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“