/tamil-ie/media/media_files/uploads/2023/01/idli_759.jpg)
Idli mavu tips
தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் காலையும், இரவும் இட்லி, தோசை தான் மெனு. இட்லி மாவை ஃபிரிட்ஜில் வைத்திருந்தாலும் 1, 2 நாள்களில் மாவு புளித்து விடுகிறது. அப்படி இல்லாமல் இருக்க மாவு அரைக்கும் போதே சில விஷயங்களை செய்தால் போதும்.
இட்லி தோசைக்கு மாவு அரைக்கும்போது அரிசியை 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும். அதற்கு மேல் அரிசி ஊறினால் மாவு விரைவில் புளிப்புத்தன்மையை எட்டிவிடும். அதேபோல் உளுந்தை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊறவைக்கூடாது. அதேபோல் மாவு அரைக்கும்போது அதிக நேரம் அரைக்க கூடாது.
கிரைண்டரில் மாவு ஆட்டும் போது ஐஸ் வாட்டர் ஊற்றி மாவு அரைப்பது நல்லது. அதேசமயம் உளுத்தம் பருப்பு சேர்த்து அரிசி ஆட்டும்போது, மாவை கையில் தள்ளிவிடக் கூடாது. ஒரு கரண்டியை பயன்படுத்தி தள்ளிவிடலாம். அதேபோல் உப்பு சேர்க்காமல் மாவை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வெற்றிலை
ஒரு சில்வர் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பாத்திரத்தின் உள், அடிப்பக்கத்தில் வாழை இலையை வைக்க வேண்டும். வாழை இலை வைக்கும் போது, நாம் சாப்பிடக்கூடிய பகுதி மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்போது இலைக்கு மேலே புதிதாக அரைத்த மாவை ஊற்றி விடுங்கள். மாவு ஊற்றிய பின்பு மாவுக்கு மேலே ஒரு வாழை இலையை கவிழ்த்தி வைத்து பாத்திரத்தை மூடி பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.
இப்படி செய்வதால் 15 நாட்கள் வரை மாவு புளிக்காமல் இருக்கும். இந்த மாவில் உப்பு சேர்க்க கூடாது. சமைக்கும்போது தேவையான அளவு மாவை எடுத்து, அதில் உப்பு சேர்த்து பயன்படுத்தலாம்.
வாழை இலைக்கு பதிலாக இரண்டு வெற்றிலையை கூட இப்படி பயன்படுத்தலாம். வெற்றிலையின் உள்பக்கம் மாவில் படும்படி வைக்க வேண்டும்.
அடுத்தமுறை வீட்டில் இட்லி மாவு அரைக்கும் போது இந்த குறிப்பை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.