தோசை டூ பூரி வரை எல்லாதுக்கு செட் ஆகும் கலவை சட்னி: இந்த சுவையை அடிச்சுக்கவே முடியாது

இந்த கலவை சட்னி டேஸ்ட் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் செய்வதும் மிகவும் சுலபம்.

இந்த கலவை சட்னி டேஸ்ட் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் செய்வதும் மிகவும் சுலபம்.

author-image
WebDesk
New Update
food 67

இந்த கலவை சட்னி டேஸ்ட் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் செய்வதும் மிகவும் சுலபம்.

Advertisment

 தேவையான பொருட்கள்  

1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு

Advertisment
Advertisements

4 துண்டு இஞ்சி

6 பூண்டு

10 சின்ன வெங்காயம்

3 பச்சை மிளகாய்

4 வர மிளகாய்

1 கைபிடி புதினா

1 கைபிடி கொத்தமல்லி

1 கைபிடி தேங்காய்

சிறிய அளவு புளி

தேவையான அளவு உப்பு

எண்ணெய்

கடுகு

கருவேப்பிலை

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பை வறுத்து எடுத்து கொள்ளவும். தொடர்ந்து அதே எண்ணெயில் இஞ்சி துண்டுகள், பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் கொத்தமல்லி, புதினா, தேங்காய், புளி ஆகியவற்றை வறுத்து கொள்ளவும். தொடர்ந்து இதில் உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். இத்துடன் வறுத்த உளுந்தையும் சேர்த்து அரைக்கவும். கடைசியாக எண்ணெய்யில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தள்ளித்து கொட்டவும். இது இட்லி, தோசைக்கு மட்டுமில்லை, சப்பாத்தி, பூரிக்கும் சூப்பராக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: