ஒரு முறை இப்படி இட்லி உப்புமா செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
இட்லி - 10
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தாளிக்க
மஞ்சள் பொடி - அரை சிட்டிகை
உப்பு - சிறிதளவு
செய்யும் முறை
இட்லியை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் இட்லி மிருதுவாக இருக்கும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை கீறி விடுங்கள்.வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.உதிர்த்த இட்லியை போட்டு, சிறிது உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் பிரட்டுங்கள். சுவையான இட்லி உப்புமா தயார்.