Advertisment

நீலக்குறிஞ்சியை விட அழகானது: இடுக்கி மலையில் பூத்துக் குலுங்கும் அரிய மேட்டுக்குறிஞ்சி மலர்கள்

மேட்டுக்குறிஞ்சி, நீலக்குறிஞ்சியை விட அழகானது. மேலும் 1,000 முதல் 1,200 மீட்டர் உயரத்தில் உள்ள புல்வெளிகள் அரிதாக இருப்பதால், இன்னும் பாதுகாக்கப்பட வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mettukurinji

Idukki Mettukurinji blooms

கேரளாவின் இடுக்கியின் பசுமையான மலைகளில் பூத்துக் குலுங்கும் நீல மலர்கள், தொலைதூர பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

Advertisment

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மிகவும் பிரபலமான நீலக்குறிஞ்சியை போலல்லாமல், இந்த மேட்டுக்குறிஞ்சி மலர்கள், ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்.

ஸ்ட்ரோபிலாந்தஸ் செசிலிஸ் என்று அழைக்கப்படும் மிகவும் அழகான மேட்டுக்குறிஞ்சி, இப்போது பருத்தும்பாறை, ராமக்கல்மேடு, வாகமன் மற்றும் கட்டப்பனாவில் உள்ள கல்யாணந்தண்டு மலை உச்சிகளில் பூத்துக் குலுங்குகின்றன.       

செசிலிஸில் (sessilis) மூன்று துணை வகைகள் உள்ளன.              

ஸ்ட்ரோபிலாந்தஸ் செசிலிஸ் var. செசிலிஸ் (இப்போது இடுக்கியில் பூத்துள்ளது), ஸ்ட்ரோபிலாந்தெஸ் செசிலிஸ் var. செசிலாய்டுகள் (தெற்கு கர்நாடகாவில் உள்ள கூர்க்கில் காணப்படுகின்றன), மூன்றாவது காஸ் பீடபூமி மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள உயரமான மலைகளில் காணப்படும்.

அனைத்து வகைகளும் ஒவ்வொரு ஏழு வருடங்களுக்கும் பூக்கும், இவை அதிகளவில் படர்ந்து விரிந்து ஒரு அற்புதமான காட்சியை உருவாக்குகிறது.

குறிஞ்சி இனத்தின் வரலாறு குறித்து மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஜோமி அகஸ்டின் கூறுகையில், குறிஞ்சி இனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை அடைந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக காணப்படுகிறது. ஏறக்குறைய 70 இனங்கள் மலைத்தொடர்களில் காணப்படுகின்றன.

mettukurinji

குறிஞ்சி இனங்களில், நீலக்குறிஞ்சி (Strobilanthes kunthiana) மிகவும் அதிகமாக பரவுகிறது. அதன் பிரபலம் காரணமாக, இந்திய அரசாங்கம் இதை (வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை III இன் கீழ்), பாதுகாக்கப்பட்ட தாவரங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.

சமீபத்தில் பூத்துக் குலுங்கும் மேட்டுக்குறிஞ்சி 1,000 முதல் 1,200 மீட்டர் உயரத்தில், நீலக்குறிஞ்சி காணப்படும் இடத்தை விட குறைவாகவே காணப்படுகிறது. இப்பகுதியில் கடந்த ஆண்டு நீலக்குறிஞ்சி பூத்தது, அடுத்து நீலக்குறிஞ்சி பூக்களைக் காண 2035 வரை காத்திருக்க வேண்டும்.

மேட்டுக்குறிஞ்சியை பாதுகாப்பதன் அவசியம்

mettukurinji

மேட்டுக்குறிஞ்சியைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்த டாக்டர் அகஸ்டின், “உண்மையாக சொல்ல வேண்டும் என்றால்,  மேட்டுக்குறிஞ்சி (Strobilanthes sessilis) நீலக்குறிஞ்சியை விட அழகானது, மேலும் 1,000 முதல் 1,200 மீட்டர் உயரத்தில் உள்ள புல்வெளிகள் அரிதாக இருப்பதால், இன்னும் பாதுகாக்கப்பட வேண்டும். நீலக்குறிஞ்சி (Strobilanthes kunthiana) எண்ணிக்கையில், நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே மேட்டுக்குறிஞ்சி உள்ளது.

கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் சுஜனபால் கூறுகையில், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) இதை ஒரு அரிய இனமாக வகைப்படுத்துகிறது. குறிப்பாக இது நீண்ட இடைவெளியில் பூக்கும் என்பதால், அதன் வளரும் பகுதிகளில் இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட உயரத்தில் வளர்வதால், அதன் வாழ்விடமானது குறிப்பிட்ட பிராந்தியம் சார்ந்தது. காலநிலை மாற்றத்துடன், பல்வேறு தாவர வகைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

mettukurinji

களைகள் அதன் பரவல் மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக உள்ளன. அதிக உயரத்தில் புல்வெளிகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்த இனங்களைப் பாதிக்கலாம், என்றார்.

சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு நிபுணரான பேராசிரியர் குஞ்சிகிருஷ்ணன் கூறுகையில், கேரளாவில் முன்பு 2017-ம் ஆண்டு மேட்டுக்குறிஞ்சி பூத்தது. நீலக்குறிஞ்சியைப் போலவே இந்த பூக்கள் சுமார் ஒரு மாத காலம் நீடிக்கும்.

மேட்டுக்குறிஞ்சி மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுகிறது,  இது கேரளாவைத் தவிர, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலத்திலும், கூர்க், குடாஜாத்ரி மற்றும் சிக்மகளூரில் பரவலாக பூக்கும். மேலும் கர்நாடக-கேரள எல்லைக்கு அப்பால் உள்ள பைதல்மாலா மற்றும் குடியன்மாலாவிலும் இது காணப்படுகிறது. நீ

மறுபுறம் நீலக்குறிஞ்சி மேற்குத் தொடர்ச்சி மலையில் கர்நாடகா வரை மட்டுமே காணப்படுகிறது, மேட்டுக்குறிஞ்சி மகாராஷ்டிரா வரை நீண்டுள்ளது.

காடுகளில் பூக்கும் பூக்களை வனத்துறை பாதுகாக்கும் அதே வேளையில், தனியார் பகுதிகளில் பூக்கும் மேட்டுக்குறிஞ்சியை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குஞ்சிகிருஷ்ணன் இந்தியன் எக்ஸ்பிரஸ் மலையாளத்திடம் கூறினார்.

மேட்டுக்குறிஞ்சி பூக்களை கெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

mettukurinji

பருத்தும்பாறையில் உள்ள ராஜ் கூறுகையில், குறிஞ்சி பூக்கும் செய்தி வெளியானதில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ந்த இடத்திற்கு திரளாக வரத் தொடங்கியுள்ளனர். அப்படி வரும் சுற்றுலாப் பயணிகள் பூக்களைப் பறிக்கின்றனர், இது அதன்  முழு அழகையும் கெடுக்கிறது.

இதனால் குறிஞ்சியைப் பார்ப்பதற்காகவே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்பவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பலாம். உள்ளாட்சி நிர்வாகம் பூக்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

வார இறுதி நாட்களில் 600 முதல் 700 பேர் வரை வந்து செல்வதாக பீர்மேடு ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.தினேசன் கூறினார். போலீசார், உள்ளாட்சி அமைப்பு சார்பில் காவலர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் பூக்களை பறிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார் தினேசன்.

Read in English: Sea of vibrant blue flowers envelops Idukki hills in Kerala as Mettukurinji blooms

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment