IE Tamil Facebook Live RJ Vigneshkanth exclusive : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் 40 நாட்களாக இந்தியர்கள் லாக்டவுனால் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். பிரபலங்களுக்கும், ஐ.இ. தமிழ் வாசகர்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக இருந்து வருகிறது ஐ.இ. தமிழ். தினமும் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் என பலரும் தொடர்ந்து தங்களின் துறைசார் அனுபவங்களையும், லாக்டவுன் அனுபவங்களையும் பேசி வருகின்றனர். அந்த வகையில் இன்று நம்முடன் பேச உள்ளார் ஆர்.ஜே. மற்றும் நடிகருமான விக்னேஷ்காந்த்.
சென்னை 28 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அவர், பிறகு மீசைய முறுக்கு, தேவ், நட்பே துணை, மெஹந்தி சர்கஸ் மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு போன்ற படங்களில் நடித்தார். கல்லூரி காலங்களிலேயே ஆர்.ஜே.வாக பணியாற்றிய அவர் பிறகு யு.டியூபில் ஸ்மைல் சேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது ப்ளாக் ஷீப் என்ற இவரின் யூடியூப் சேனல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க : கொரோனாவால் 1000 மரணங்கள் : இந்தியாவை விட அதிக சோதனைகள் மேற்கொண்டிருந்த ஜெர்மனி
நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் பாடலாசிரியாராகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டார். ஐ.இ. தமிழ் முகநூல் நேரலையில் பேச இருக்கும் அவரிடம், அவர் துறைசார் அனுபவங்கள் குறித்தும், லாக்டவுன் அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”