/tamil-ie/media/media_files/uploads/2020/05/96152734_644846509694264_7235217046877765632_o.jpg)
IE Tamil FB Live Exclusive Pazhaya Joke Thangadurai
IE Tamil FB Live Exclusive Pazhaya Joke Thangadurai : கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அனைவரும் லாக் டவுனில் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் பிரபலங்களையும் வாசகர்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது ஐ.இ. தமிழ் இணையம் மற்றும் முகநூல் பக்கம்.
ஒவ்வொரு நாளும் அதிகாரிகள், நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பல்வேறு நபர்கள் தங்களின் துறைசார் அனுபவங்கள் மற்றும் லாக்டவுன் அனுபவங்கள் குறித்து பேசி வருகின்றனர்.
அந்த வரிசையில் இன்று நம்முடன் இணைகிறார் விஜய் டிவி புகழ் பழைய ஜோக் தங்கதுரை. அவரின் துறைசார் அனுபவங்களையும், திரையுலக அனுபவங்களையும் உங்களுடன் இன்று பகிர்ந்து கொள்ள உள்ளார். நீங்கள் இன்று மாலை 5 மணிக்கு எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள். அவரின் நகைச்சுவையான உரையாடலில் நீங்களும் பங்கேற்று அவருடன் பேசலாம். இந்த ஒரு கலகலப்பான சந்திப்பை யாரும் மிஸ் செய்ய வேண்டாம்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிறந்த இவர் மாஸ் கம்யூனிகேசன் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். மேடை பேச்சாளாராக தன்னை வளர்த்துக் கொண்ட அவர் 50க்கும் மேற்பட்ட கானா பாடல்களை எழுதி பாடியும் உள்ளார். எங்கேயும் எப்போதும், ஜிகர்தண்டா, ரம்மி, மற்றும் வாலு உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர் நடித்திருந்தாலும், விஜய் டிவியின் ”அது இது எது” அவரை புகழின் உச்சத்திற்கு அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.