Advertisment

”சேலை கட்ட தெரியாதென்றால் நீங்கள் அவமானப்பட வேண்டும்”: பிரபல ஃபேஷன் டிசைனர் கருத்து

. இவர் அண்மையில் இந்திய இளம்பெண்கள் சேலை அணிவதில்லை எனவும், மேற்கத்திய உடைகள் அணியவே ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
”சேலை கட்ட தெரியாதென்றால் நீங்கள் அவமானப்பட வேண்டும்”: பிரபல ஃபேஷன் டிசைனர் கருத்து

இந்தியாவின் மிக பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி. இவர் அண்மையில் இந்திய இளம்பெண்கள் சேலை அணிவதில்லை எனவும், மேற்கத்திய உடைகள் அணியவே ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சப்யசாச்சி முகர்ஜி, “எனக்கு சேலை அணிய தெரியாது என நீங்கள் என்னிடம் சொன்னால், அதுகுறித்து நீங்கள் அவமானப்பட வேண்டும். இது உங்களின் கலாச்சாரம். அதனை நீங்கள்தான் நிலைநிறுத்த வேண்டும்”, என தெரிவித்தார். இந்த கருத்தை அங்கிருந்தவர்கள் பலரும் கைதட்டி வரவேற்றனர்.

சேலை கட்டுவதில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பேசினார்.

மேலும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் செல்லும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சேலை அணிந்துகொண்டுதான் செல்வார் என கூறினார்.

”சேலை அணிவது மிகவும் சுலபம். சேலை அணிந்துகொண்டு போரில் பெண்கள் சட்டையிட்டுள்ளனர். நமது பாட்டிகள் சேலை அணிந்துகொண்டே தூங்கியிருக்கின்றனர். காலையில் மடிப்பு கலையாமல் எழுந்துள்ளனர்”, என சப்யசாச்சி தெரிவித்தார்.

If you grew up in Bengal at the time I was growing up, sometime between late seventies and early eighties, you would know that the consumer was the designer. I spent hours watching my mother and her friends stretching organdy sarees over hand frames and hand painting exotic blooms on them. More often than not, they would match the blooms in their sarees to the real blooms on their hair. Talk about style! This is my homage to them. My mother and all her Bengal art school friends. What they lacked in terms of resources, they always over compensated with imagination. That is the true art of dressing well and good housekeeping! #Sabyasachi #TheWorldOfSabyasachi #TheSabyasachiArtFoundation #DeepikaPadukone #AsianPaints #Nilaya #SabyasaschixAsianPaints #SabyasachiForNilaya @worldofnilaya @asianpaints @deepikapadukone

A post shared by Sabyasachi Mukherjee (@sabyasachiofficial) on

மேலும், ஆண்களிடையே வேட்டி கட்டும் வழக்கமும் ஒழிந்துவிட்டதாக சப்யசாச்சி தெரிவித்தார்.

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment