Advertisment

அரிசியில் விழுந்த வண்டு, அதிகம் தண்ணீர் ஆகிவிட்ட பூரி மாவு; பிரச்னையே இல்லை. சரி செய்ய டிப்ஸ் இதோ!

பொதுவாக பழைய அரிசியில் கருப்பு நிறத்தில் சிறிய வண்டுகள் உருவாகிவிடும், பூரி செய்ய மாவு பிசையும்போது, தவறுதலாக அதிகம் தண்ணீர் ஊற்றிவிடுவோம், அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த அனுபவம் இருக்கிறதா உங்களுக்கான டிப்ஸ் இதோ.

author-image
WebDesk
New Update
rice 1

அரிசியில் விழுந்த வண்டுகளை எப்படி எளிதாக அகற்றுவது டிப்ஸ் இதோ (youtube: @nalinimanickcooking‬)

பொதுவாக பழைய அரிசியில் கருப்பு நிறத்தில் சிறிய வண்டுகள் உருவாகிவிடும், பூரி செய்ய மாவு பிசையும்போது, தவறுதலாக அதிகம் தண்ணீர் ஊற்றிவிடுவோம், அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் முழித்துக்கொண்டிருந்த அனுபவம் இருக்கிறதா உங்களுக்கு, இனி கவலையே படவேண்டாம், அதை எளிதில் சரி செய்ய டிப்ஸ் இதோ உங்களுக்காக தருகிறோம்.

Advertisment

சோறு சமைக்கும்போது, பெரும்பாலும் புதிய அரசியைவிட பழைய அரிசிதான் நல்லது என்கிறார்கள். ஏனென்றால், பழைய அரிசி வேகவைத்தால், புதிய அரிசியைவிட நிறைய சோறு ஆகும், நீண்ட நேரம் கெடாமல் இருக்கும் என்பது ஒரு காரணம். ஆனால், நீண்டநாள் அரிசியை அப்படியே வைத்திருக்கும்போது, அரிசியில் கருப்பு நிறத்தில் சின்ன சின்ன வண்டுகள் இறங்கிவிடும். அதனால், சமைக்க அரிசி எடுக்கும்போது, ஒவ்வொரு முறையும் அரிசியை முறத்தில் புடைத்து சுத்தம் செய்ய வேண்டும். முறத்தில் புடைக்கத் தெரியாதவர்கள், கைகளால் ஒவ்வொரு வண்டாக பொறுக்கி எடுக்க வேண்டும். இந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா, அப்படி ஒருவேளை அரிசியில் சின்ன வண்டுகள் இருந்தால் அவற்றை நீக்க டிப்ஸ் தெரிந்துகொள்ளுங்கள். வண்டுகள் இருக்கும் அரிசியை எடுத்து, சிறிய ஸ்டீல் ஃபில்டர்களில் அரிசியைக் கொட்டி சலித்தால், அரிசியில் இருக்கும் வண்டுகள், தூசுகள் எல்லாம் ஃபில்டரில் கீழே விழுந்துவிடும். இப்போது சுத்தமான அரிசி மட்டும் ஃபில்டரில் நிற்கும்.

அதே போல, நீங்கள் சப்பாத்தி அல்லது பூரி செய்யும்போது, தவறுதலாக அதிகம் தண்ணீர் ஊற்றிவிட்டிருப்பீர்கள், அப்படி அதிகம் தண்ணீர் ஊற்றிவிட்ட பிறகு, அதை சரி செய்ய மீண்டும் சிறிது கோதுமை மாவு சேர்த்து பிசைந்து சரி செய்வீர்கள். ஆனால், அதிகம் தண்ணீர் ஊற்றிவிட்டால் அதை சரி செய்வதற்கு மாவு இல்லை என்றால் என்ன செய்வது என்று குழம்பிப்போய் முழித்துக்கொண்டு இருந்திருக்கிறீர்களா, நீங்கள் கவலையே படவேண்டாம், உங்களுக்காக இதோ ஒரு டிப்ஸ் தருகிறோம். ஒரு ஸ்டீல் பாத்திரம் அல்லது ஒரு குக்கர் பாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிது எண்ணெய் தடவி வைத்து ஸ்டவ்வில் வைத்து சிம்மில் சூடுபடுத்துங்கள். இப்போது, அதிகம் தண்ணீர் ஊற்றப்பட்ட சப்பாத்தி அல்லது பூரி மாவை எடுத்து அதிலே போட்டு, அதை திருப்பி விடுங்கள், ஒரு கட்டத்தில் மாவு கெட்டியான உடன் நீங்கள் வழக்கம் போல, சப்பாத்தியோ பூரியோ செய்யலாம். நன்றாக இருக்கும்.

அதேபோல, முட்டை வேக வைக்கும்போது, உள்ளே இருக்கும் மஞ்சள் கருவின் மேல்பகுதி லேசாக கருத்து காணப்படும். அப்படி கருப்பு நிறத்தில் மாறாமல் இருக்க உங்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். உங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் இருந்தால் ஐஸ் கட்டிகளை தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஐஸ்கட்டியை ஒருபாத்திரத்தில் போட்டு தண்ணீர் தண்னீர் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். நன்றாக வேக வைத்த முட்டையை அந்த ஐஸ்கட்டி பாத்திரத்தில் போட்டு வைத்திருங்கள். பிறகு, அந்த முட்டையை எடுத்து உரித்துப்பாருங்கள், முட்டைக்குள் இருக்கு மஞ்சள் நிற கரு அப்படியே மஞ்சளாகவே இருக்கும். இதை நீங்கள் உங்கள் வீடுகளில் செய்து பாருங்கள், பயனுள்ளதாக இருக்கும். இந்த டிப்ஸ்களை நளினி மாணிக் குக்கிங் என்ற யூடியூப் சேனலில் கூறியிருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cooking Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment