Advertisment

Ramadan Iftar Recipes: இஃப்தார் விருந்தில் இந்த உணவுகள் கட்டாயம்! அதிலும் நோன்பு கஞ்சி டாப் ஹைலைட் ரெசிபி.

Ramadan Special Iftar Recipes in Tamil: ஆரோக்கியமான மற்றும் எளிமையான ரெசிப்பிக்கள் இதோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
iftar recipes

iftar recipes

Iftar Recipes : புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் அதனை மாலையில் முடிக்கும் போது, பழத்தை உண்டு முடிப்பது வழக்கம். அதன்பின்பு இறைவனை வணங்கி விட்டு அனைவருக்கும் இஃப்தார் விருந்தை அளிப்பார்கள். அந்த விருந்தில் இஸ்லாமியர்கள் தவிர அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது.

Advertisment

இப்படிப்பட்ட இந்த இஃப்தார் விருந்தில் உண்பதற்கான ஆரோக்கியமான மற்றும் எளிமையான ரெசிப்பிக்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

Iftar Recipes 2019, Ramadan Special Recipes 2019 :

1. ஜாலர் ரோல்ஸ் :

தேவையான பொருட்கள்

சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது தேக்கரண்டி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், எலுமிச்சை, கலர்பொடி, எண்ணெய்,

கருவேப்பிலை, உப்பு.

செய்முறை:

பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றி அதில், தண்ணீர், தேங்காய்ப்பால், மைதா மாவு, உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் நீர்க்க கரைக்கவும். இந்த மாவை `பைப்பிங் பேக்’கில் ஊற்றவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை வலை போன்று கல்லில் சுற்றி ஊற்றவும். எண்ணெய் சிறிதளவு ஊற்றி தோசை போல் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும். இதுவே ஜாலர் ரோல்ஸ் தோசை.

குக்கரில் கோழியுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, சிறிதளவு தண்ணீர்விட்டு மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி காய்கறிகள் சேர்த்து, முக்கால் வேக்காடு பதத்துக்கு வேகும் வரை வதக்கவும். இதனுடன் வெந்த சிக்கன் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி நன்கு வேகவிடவும். இதுவே பூரணம். ஒரு ஜாலர் தோசையின் மேல் ஓரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து தோசையின் இரண்டு ஓரங்களையும் உட்புறமாக மடிக்கவும். பிறகு, பூரணம் உள்ள பக்கத்தை அதன் எதிர்புறமாக பாய் போல சுருட்டி இறுக்கமான ரோல் போன்று செய்யவும். சாஸுடன் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

Iftar Recipes 2019, Ramadan Special Recipes 2019 Iftar Recipes 2019, Ramadan Special Recipes 2019

2. கிரிஸ்பி மிளகாய் சிக்கன்:

செய்முறை:

காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.

2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து கிளறி 5 நிமிடம் வைக்கவும், வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்.

Iftar Recipes 2019, Ramadan Special Recipes 2019 Iftar Recipes 2019, Ramadan Special Recipes 2019

3. நோன்பு கஞ்சி:

1) சாதாரண தண்ணீரில் பச்சரிசி,வெந்தயம்,கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.

2) ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு+மஞ்சள்பொடி+மிளகாய்பொடி கலந்து தயாராக வைக்கவும்.

3) தக்காளி,வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக/ஸ்லைசாக நறுக்கவும்.

4) புதினா+மல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

5) கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

6) எஞ்சிய இஞ்சியையும் பூண்டையும் தோல்நீக்கி மிக்ஸியிலிட்டு பேஸ்ட் ஆகும்படி அரைக்கவும்.

செய்முறை:

7) சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.

8) நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.

9) ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

10) நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயை வதக்கும்போது சேர்த்துக் கொள்ளவும்.

11) வதங்கும்போது சீரகப் பொடி+மஞ்சள் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சட்டிக்குள் இறக்கவும்

12) மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடவும்.

13) அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.

14) கொதி வந்தபிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

15). கொதிக்கும்போது பாதியளவு எலுமிச்சை சாறுபிழிந்து சட்டியில் இடவும்.

16) தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிப்பாகம் பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.

17) அரிசி கரைந்தபிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.

18) புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும். சுவையான நோன்பு கஞ்சி தயார்.

Iftar Recipes 2019, Ramadan Special Recipes 2019 Iftar Recipes 2019, Ramadan Special Recipes 2019

Food Recipes Ramzan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment