/tamil-ie/media/media_files/uploads/2020/07/template-2020-07-27T155958.525.jpg)
Health benefits of custard apple
Immunity Booster News In Tamil: கொரோனா தொற்று குறைந்தபாடாக தெரியவில்லை. இந்த நேரத்தில் நாம் நமது உடல் ஆரோக்கியத்தில் போதிய கவனம் செலுத்தாவிடில், நாமும் அதன் பிடியில் சிக்கிவிடுவோம். நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பெருக, நமது உணவில் சீதாப்பழம் உள்ளிட்ட சிலவகை பழங்களை சேர்த்துக்கொண்டால் போதும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சீதாப்பழம் மிகவும் சுவையானது. இதில் சரியான அளவு கலோரிகள், புரதம், கொழுப்பு, இரும்புச்சத்துக்கள், மெக்னீசியம், காலசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் தேவையான அளவில் உள்ளன
சீதாப்பழத்தில் மினரல்கள் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், ஜீரணத்திற்கு உதவுகிறது. சீரான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கலை வராமல் தடுக்க உதவுகிறது.
Health benefits of custard apple- நோய் எதிர்ப்பு சக்தி
சீதாபழத்தில் அதிகளவு வைட்டமின்கள் உள்ளதால், இதை தினமும் சாப்பிட்டு வருபவர்கள் அதிக காலம் இளமைத்தோற்றத்துடன் இருப்பர். இந்த பழத்தில் உள்ள ப்ரீ ரேடிகல்ஸ், உடலை கட்டுக்கோப்பாகவும் எப்போதும் ஆக்டிவாகவும் இருக்க உதவுகிறது.
இதயம் வடிவிலான இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, இதயம் சீராக இயங்குவதுடன் ரத்த ஓட்டமும் சீராக இருக்கிறது, ரத்தசோகை வருவதை தடுக்கிறது. இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், உடலில் உள்ள தமனிகள் சீராக செயல்பட்டு,ரத்தத்தில், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்து எந்நாளும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
கோடைக்காலங்களில் அதிக உஷ்ணம் காரணமாக உடலில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க இந்த பழம் அருமருந்தாக செயல்படுகிறது.
உணவில் சீதாப்பழம் சேர்த்துக்கொள்ளும் முறை
சீதாப்பழத்தை உரித்து எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி, சதைப்பற்றுள்ளதை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்
பின் அதனுடன் ஒரு தேக்கரண்டி ஓட்சை சேர்த்துக்கொள்ளவும்
வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தயிர் சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும்
பின் இதை ஓட்ஸ் கலந்துவைத்துள்ள சீதாப்பழத்துடன் கலந்து நைசாக அரைத்துக்கொள்ளவும்
மில்க் ஷேக் போன்று வரும் பானத்தை குடிக்கவும்
இந்த முறையை கடைப்பிடிப்பதற்கு முன், உங்களது ஊட்டச்சத்து நிபுணர் உடன் கலந்தாலோசித்து கொள்ள மறவாதீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.