Immunity booster news in tamil: ஒரு சுவையான மற்றும் பிரபலமான தொட்டுக் கொள்ளும் உணவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சட்னி ஒருவரின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. நாடுமுழுவதும் பல்வேறு வகையான சட்னிகள் தயாரிக்கப்பட்டாலும், ஊட்டச்சத்துக்களை முழுமையாக உட்கொள்வதை உறுதிப்படுத்த நிறைய அளவு சட்னியை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதுமட்டுமல்லாமல் சட்னிகள் ஊட்டச்சத்துக்களின் உரைவிடமாகவும் உள்ளது.
ஊட்டச்சத்து நிபுணர் Lovneet Batra சமீபத்தில் கூறிய ருசியான தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து செய்யும் சட்னி.
Immunity boosting chutney:நோய் எதிர்ப்பு சக்தி சட்னி
தேவையான பொருட்கள்
1 – தக்காளி
4 – பல் வெள்ளை பூண்டு
1 – பச்சை மிளகாய்
½ தேக்கரண்டி – கடுகு எண்ணெய்
சிறிது உப்பு
சிறிய அளவு சக்கரை
தயாரிப்பு முறை
* தக்காளி, பூண்டு மற்றும் மிளகாயை சிறிது வதக்கவும்.
* அதனோடு கடுகு எண்ணெய், தேவையான உப்பு மற்றும் ஒரு சிட்டிகை சக்கரை ஆகியவற்றை சேர்த்து ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
எதற்காக நீங்கள் தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து செய்த சட்னியை சாப்பிட வேண்டும்.
தக்காளி வைட்டமின் மற்றும் glutathione னை வழங்குகிறது. மேலும் உயிர்கொல்லி நோயான புற்று நோய் போன்றவற்றை விரட்டுகிறது.
Prebiotic ஆன பூண்டு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil