Advertisment

எலுமிச்சை ரசத்திற்கு இஞ்சி தான் ”சீக்ரெட்”... மிளகு ரசமெல்லாம் தள்ளி நிக்கனும்

Immunity booster receipe lemon ginger rasam in tamil: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் எலுமிச்சை இஞ்சி ரசம்; ரெசிபி இதோ...

author-image
WebDesk
Jun 16, 2021 15:40 IST
எலுமிச்சை ரசத்திற்கு இஞ்சி தான் ”சீக்ரெட்”... மிளகு ரசமெல்லாம் தள்ளி நிக்கனும்

நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகளின் பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பவை இஞ்சி மற்றும் எலுமிச்சை. நார்ச்சத்து அதிகமுள்ள பாசிப்பருப்புடன் இந்த இஞ்சி மற்றும் எலுமிச்சையை சேர்த்து உருவாக்கப்படும், ஒரு ரசம் உங்கள் இம்யூனிட்டியை நிச்சயம் அதிகரிக்க உதவும். வாருங்கள் அந்த சத்தான எலுமிச்சை இஞ்சி ரசம் எப்படி வைப்பது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – ஒரு துண்டு

எலுமிச்சை – 1

மிளகு – ½ டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

தக்காளி – 2-3

பச்சை மிளகாய் – 3

உப்பு – தேவையான அளவு

நெய் – ½ டீஸ்பூன்

எண்ணெய் – ½ டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீ ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

பெருங்காயம் – ¼ டீஸ்பூன்

மல்லித்தழை – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லித்தண்டு –சிறிதளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்த பின் அதில் பாசிப்பருப்பைச் சேர்க்கவும். இதில், தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பாசிப்பருப்பை வேக விட வேண்டும்.

அடுத்ததாக சீரகம் மற்றும் மிளகை ரசம் வைக்க தேவையான பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை பேஸ்ட்டாக அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர், பாசிப்பருப்பு பாதிக்கு மேல் வெந்த பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். அதில் சுவைக்காக கொத்தமல்லித் தண்டை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்த பின் கொத்தமல்லித்தண்டை வெளியில் எடுத்துவிட வேண்டும். பின்னர் அரைத்து வைத்த இஞ்சி பச்சை மிளகாய் பேஸ்ட்டை இதில் சேர்க்க வேண்டும்.

அவையும் நன்கு கொதித்த பின் அதில், அரைத்து வைத்த மிளகு சீரகப்பொடியை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

சிறிது கொதித்த பின் இதில் மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பின்னர் எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு, அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

அடுத்து தாளிப்புக்காக ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும். சூடான பின் அதில் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.

பின்னர் இதில் பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, ஏற்கனவே செய்து வைத்த ரசத்தில் சேர்த்து விடவும்.

சுவையான சத்தான எலுமிச்சை இஞ்சி ரசம் ரெடி!  

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle #Lemon #Boost Immunity #Health Benefits Of Ginger
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment