Immunity Boosting Foods: வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்களை உடனடியாக வைரஸ்களுக்கு எதிராக போராடும் ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றிவிடாது என்றாலும், இவற்றை உட்கொள்வது உங்கள் உடலுக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். நாம் என்ன சாப்பிடுகிறோம் மற்றும் எப்படி நமது டயட்டை மேம்படுத்த முடியும் என தற்போதைய நேரம் நிச்சயமாக நம்மை கவலையடைய செய்துள்ளது.
இந்த 5 வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடவும் செய்கிறது.
முகம் பொலிவாக மிளிர, குளிர்ந்த தண்ணீர் போதும்: நீங்க இதைச் செய்றீங்களா?
1. வைட்டமின் டி : முட்டை, மீன், கோழி இறைச்சி மற்றும் மீன் எண்ணெய் மாத்திரை ஆகியவற்றில் இந்த வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது. முக்கியமான இந்த சத்து நோய் கிருமி அல்லது பாக்டீரியா தாக்குதல் ஏற்படும் போதெல்லாம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை செயல்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
எனினும் இந்த வைட்டமின் சத்து அதிகமாக கிடைப்பது நமது மீது சூரிய ஒளி விழும் போதுதான். நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து வைட்டமின் டி சத்தை உற்பத்தி செய்ய புற ஊதா கதிர்கள் உடலை தூண்டுகின்றன. வாரத்துக்கு இரண்டு முறை 5 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படுவது கட்டாயம் தேவை.
2. வைட்டமின் சி: வைட்டமின் சி சத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்குகிறது. நெல்லிக்காய், எலுமிச்சை, கிவி, மாங்காய், ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு நோயெதிர்ப்பு அமைப்பு ஊக்கியாக புகழ் பெற்றது.
3. வைட்டமின் இ : பாதாம், வேர்க்கடலை, சூரியகாந்தி விதைகள் மற்றும் hazelnuts ஆகியவை வைட்டமின் இ சத்து அதிகமுள்ள உணவுகளாகும். வைட்டமின் இ ஒரு சக்திவாய்ந்த antioxidant இது உங்கள் உடலில் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
சமமான குடும்ப பொறுப்பு என்பது குழந்தை வளர்ப்பை மட்டும் பகிர்ந்து கொள்வதல்ல
4. மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் (Magnesium and zinc): நமது உடலில் உள்ள நொதி செயல்முறைகளை (enzymatic processes) மேற்கொள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றுடன் மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகிய தாதுக்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. மெக்னீசியம் வைட்டமின் டி யை அதன் செயலில் பயன்படுத்தக்கூடிய வடிவமாக மாற்ற உதவுகிறது மற்றும் துத்தநாகம் நம் உடலில் அழற்சி எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறது. இது நமது உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்படையும் போது உதவுகிறது.
5. செலினியம் (Selenium) : நோயெதிர்ப்பு மண்டலத்தில் செலினியம் ஒரு சக்திவாய்ந்த விளைவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. வெள்ளைப் பூடு, ப்ரோக்கோலி, sardines மற்றும் tuna மீன் மற்றும் பார்லி ஆகியவற்றில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.