இம்யூனிட்டி… இந்த வயதுப் பெண்கள் இதையெல்லாம் தவற விடாதீங்க!

Immunity Boosting Foods for women: மாதவிடாய் நின்ற பெண்களுக்கு உதவக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியல்

Immunity-boosting foods for women over 40 - 40 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உண்ண வேண்டிய

Fitness Tips for Women: பெண்கள் 40 வயதிற்குப் பிறகு உடல் எடையை குறைப்பது கடினம் மற்றும் சாத்தியமற்றது என நினைக்கின்றனர் இருப்பினும், இது ஒரு கட்டுக்கதை, சரியான வகை உணவு மற்றும் உடற்பயிற்சியால், உடல் எடையை குறைப்பது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முற்றிலும் சாத்தியம் என்பதை பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும் என உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ரோஹித் ஷெலட்கர் கூறுகிறார்.40 வயதுக்கு பிறகு பெண்கள் உடல் எடை அதிகரித்தல், மூட்டு வலி, எலும்பு பலவீனம், தசை பலவீனம், இளமை குறைதல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.அதுவும் தங்களின் மாதவிடாய் நிற்கும் காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டு கடந்து செல்கிறார்கள்.

பருவம் அடைவது துவங்கி மெனோபாஸ் வரை ஒவ்வொரு பருவத்திலும் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். மெனோபாஸை நெருங்கும் பெண்கள், இயல்பாகவே ‘மூட் ஸ்விங்ஸ்’ பிரச்னைக்கு உள்ளாவார்கள். இந்த வயதில், பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் பிரச்னையும் ஏற்படும் அது சார்ந்த பயமும் அதிகமாக இருக்கும். ஆகவே, பெரும்பாலான பெண்களுக்கு 40 வயதிற்குப் பின், ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதங்கள் (உடல் எவ்வளவு விரைவாக உணவை ஆற்றலாக மாற்றுகிறது) குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் வழக்கமான உடற்பயிற்சியைப் மேற்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.இது தவிர, காரம் நிறைந்த, வறுத்த உணவுகளைத் தவிர்ப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது.

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு உதவக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியல்

சியா விதைகள்: தாவரங்களில் இருந்து மனித உடலுக்கு கிடைக்க கூடிய ஒமேகா-3 கொழுப்பு அமிலம் சியா விதைகளில் அதிக அளவில் காணப்படுகிறது. சியா விதைகளில் அதிக அளவிலான புரதம், ஆன்டிஆக்சிடண்ட்ஸ், கொழுப்புச் சத்துக்கள் மற்றும் நார் சத்துக்கள், கால்சியம், மெக்னீசியம் உள்ளது. சியா விதைகளை காலை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம் அல்லது Oatmealலில் சேர்த்து சாப்பிடலாம்.

சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை ஆகியவற்றில் ஆக்ஸிஜனேற்றிகள், ஃபைபர், வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. அவை மூளையின் ஆரோக்கியத்தை உயர்த்துவதற்கும், எடையை குறைக்க உதவுவதற்கும், இதயத்தை பாதுகாப்பதற்கும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

முட்டை: பெரும்பாலான பெண்களிடம் இல்லாத ஊட்டச்சத்துக்களான வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து முட்டையில் அதிகம் உள்ளது.மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முட்டை ஒரு சிறந்த புரத சத்து நிறைந்த உணவு. மேலும் இது கொழுப்பின் அளவை குறைக்கவும், இதயநோய் ஆபத்து மற்றும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மிதமான கொழுப்பு மற்றும் அதிக புரதச் சத்து , கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகள் இல்லாதது போன்ற காரணத்தால் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு முட்டை சிறந்த தேர்வாக இருக்கிறது.

எண்ணெய் மீன்: எண்ணெய் மீன்களான சால்மன், மற்றும் ட்ரௌட் போன்றவற்றில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகளை தினமும் உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகள் பெண்களின் உடலில் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. அவை மூளை, இதயம் மற்றும் மூட்டு ஆரோக்கியத்தையும் அதரிக்கின்றன. ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்ட உணவுகள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைக்க உதவுகின்றன. எண்ணெய் மீன்களில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மாதவிடாய் நின்ற அறிகுறிகளான ஹாட் ஃப்ளாஷ் மற்றும் இரவு வியர்த்தல்களைக் குறைக்க உதவும்.

நட்ஸ்: நட்ஸ் டேஸ்டியான காலை உணவு மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததும் கூட. இது காலையில் உங்கள் வயிற்றை நிரப்புவதோடு உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. இவற்றில் நார்ச்சத்து அதிகம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அதிக அளவு புரதம் உள்ளது.

கேரட்: வைட்டமின் ஏ நிரம்பிய கேரட் சருமத்தை மென்மையாகவும், பார்வையை கூர்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த காய்கறியில் நார்ச்சத்து உள்ளது. கேரட் சாப்பிடுவது சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் முகப்பருக்கள் வராமல் பாதுகாக்கும்.

ஆப்பிள்: ஆப்பிளானது உடல் எடையை குறைக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. ஆப்பிள் மற்றும் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவதால் இதய நோய் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

தயிர்: தயிரில் அதிக அளவு கால்சியம் மற்றும் புரத சத்துக்கள் உள்ளது. இது உடலை முழுமையான ஆற்றலுடன் வைத்திருக்க உதவும். குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க நல்ல பாக்டீரியாக்களான புரோபயோடிக்குகள் நிறைந்த உணவுகளான தயிர் மற்றும் யோகர்ட் போன்றவற்றை சாப்பிடுவதே சிறந்த வழி.

இவை தவிர தினமும் உடற்பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Immunity boosting foods for women

Next Story
குக்கர் இல்லாமல் சில நிமிடங்களில் சாதம்: பேச்சுலர்கள் இதை ட்ரை பண்ணுங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express