நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், சளி, இருமல், காய்ச்சல் ஏற்படாமல் இருக்கும். இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது நோய்யை குறைத்து, காய்ச்சல் வரும் நேரத்தில் உடல் ரீதியாக பலமாக இருக்க உதவும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. நார்த்து இதில் உள்ளது. இவை எல்லாம் நோய்யிலிருந்து நம்மை காப்பற்றும்.
ஆரஞ்சு
இதில் வைட்டமின் சி உள்ளது. இந்நிலையில் இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஒரு நாளில் நமக்கு தேவைப்படும், 70% வைட்டமின் சி-ஐ இது கொடுக்கிறது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் தோற்றுகளில் இருந்து நம்மை காப்பற்றுகிறது. சளியை ஒதுக்கி வைத்துவிடும்.
கிரேப்ஸ்
இதில் வைட்டமின்ஸ், மினரஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. உடலுக்கு தேவையான தண்ணீர் சத்தை இது கொடுக்கும் . இதனால் வரட்சி ஏற்படாது. இதில் உள்ள வைட்டமின் சி சத்து நோய்களுக்கு எதிராக செயல்படும். 100கிராம் கிரேப்சில், 4 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது.
கிவி பழங்கள்
இதில் வைட்டமின் சி உள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது. மேலும் இதில் இருக்கும் நார்சத்து, நமது ஜீரணத்திற்கு உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“