Immunity juice turmeric health benefits Tamil Newsஇன்றைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி, பாக்டீரியா அல்லது வைரஸ்களால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது முக்கியம்.
Immunity juice turmeric health benefits Tamil Newsஇன்றைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி, பாக்டீரியா அல்லது வைரஸ்களால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது முக்கியம்.
Immunity juice turmeric health benefits Tamil News
Immunity juice turmeric health benefits Tamil News : தொற்றுநோயின் அச்சுறுத்தல் இன்னும் பெரியதாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது மற்றும் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது அவசியம். அவற்றைச் செய்ய பல்வேறு வழிகள் இருந்தாலும், புதிய காய்கறிகள் மற்றும் பொதுவாகக் காணப்படும் சமையலறை மசாலா மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைச் சார்ந்து இருப்பதை விடச் சிறந்தது எதுவுமில்லை.
Advertisment
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கலவை பொருள்களில், காலப்போக்கில் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் அனைத்து ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இருக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி, பாக்டீரியா அல்லது வைரஸ்களால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது முக்கியம். நோயெதிர்ப்பு அமைப்பு காலப்போக்கில் உருவாக்கப்படுவது. அதாவது ஒருவர் முடிந்தவரை சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜூஸ் போன்றவற்றை விரும்பினால், நீங்கள் கண்டிப்பாக அர்ச்சனாஸ் கிச்சனில் இருந்து அர்ச்சனா தோஷி பரிந்துரைக்கும் இந்த ரெசிபியை முயற்சி செய்யலாம்.
"மஞ்சள், பெரிய நெல்லிக்காய், இஞ்சி, மிளகு மற்றும் தேன் - நாம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் ஜூஸ் வகைகள். நான் எப்போதும் மஞ்சள் பால் மட்டுமே சாப்பிட்டு வந்தேன். அதை என் குழந்தைகளுக்கும் கொடுத்தேன். இந்தோனேஷியாவின் பாலியில் ஜஜாமு என்ற பெயரில் உள்ள ஜூஸை உட்கொண்டேன்.. அவர்கள் பெரிய நெல்லிகாவை சேர்க்கவில்லை. ஆனால், இது ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்பதால் நான் சேர்த்திருக்கிறேன்.
தேவையான பொருட்கள் புதிய மஞ்சள் - 250 கிராம் புதிய பெரிய நெல்லிக்காய் - 200 கிராம் புதிய இஞ்சி - 100 கிராம் ருசிக்கத் தேன் மற்றும் மிளகு
செய்முறை
*புதிய நெல்லிக்காய், புதிய மஞ்சள் மற்றும் இஞ்சியை அரைத்துக்கொள்ளவும். பிறகு தண்ணீரில் கலந்து வடிகட்டவும். *அந்தக் கலவையை மீண்டும் அதிக தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இதை மூன்று முதல் நான்கு முறை செய்யவும்.
அதை எப்படி உட்கொள்வது?
*நீங்கள் ஒரு வாரத்திற்கு ஃப்ரிட்ஜில் சேமிக்கக்கூடிய சுமார் 1 லிட்டர் ஜூஸ் கிடைக்கும். *இந்த ஜூஸை சிறிய ஷாட் கண்ணாடி க்ளாசில் ஊற்றிக் குடிக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil