நாட்டில் இப்போது நாம் பெரும்பாலும் கேட்கும் வார்த்தை ஆக்ஸிஜன் பற்றாக்குறை. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு வைரஸ் நுரையீரலைத் தாக்குவதால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் செயற்கையாக ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக நம் உடலின் ஆக்ஸிஜன் அளவு திடீரென வீழ்ச்சியடைவதை பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். இது கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது மற்றும் ஆபத்தானது. கொரோனா வைரஸ் இருக்கோ, இல்லையோ, ஆக்ஸிஜன் நமக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை பராமரிக்கவும், உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்து அவசியம்.
நமது உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறவும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளைத் தற்போது பார்ப்போம்.
ஆக்ஸிஜன் அதிகம் கிடைக்கக்கூடிய உணவுகள்
ஆக்ஸிஜனேற்றிகள் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுகள் உங்கள் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராகப் பாதுகாக்கலாம் மற்றும் பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். அதாவது இதய நோய்கள் மற்றும் சில புற்றுநோய்கள் உட்பட பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
அவகேடோ, வாழைப்பழங்கள், கேரட், செலரி, பூண்டு மற்றும் பேரீட்சை அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன, இதனால் இந்த உணவுப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவற்றின் pH மதிப்பு 8. பேரீட்சை மற்றும் பூண்டுகளில் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும் பண்புகள் உள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை பராமரிக்க வல்லவை.
ஆக்ஸிஜன் அளவை பராமரிக்க உதவும் உணவுகளில் அவகேடோ நம்பமுடியாத சத்தான மற்றும் மிகவும் ஆரோக்கியமான உணவாகும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில், நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பசியைக் குறைத்தல் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்தல் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
அல்பால்ஃபா இலைகள், ஆப்பிள்கள் மற்றும் பாதாம் போன்ற உணவுகள் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஆகும், இவற்றின் pH மதிப்பும் 8 ஆகும். மேலும் இவை எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளாகும். கூடுதலாக, உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவும் ஏராளமான என்சைம்கள் அவற்றில் உள்ளன. இதனால், இவை நிச்சயமாக இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும்.
எலுமிச்சை
ஆக்ஸிஜன் நிறைந்த உணவுகளில் எலுமிச்சையில் ஆக்ஸிஜன் அதிகம். எலுமிச்சை அமிலத்தன்மை கொண்டது. ஆனால் உட்கொள்ளும்போது காரமாக மாறும். எலுமிச்சை மின்னாற்பகுப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, மேலும் இது ஒரு சிறந்த கார உணவாகிறது. இது இருமல், சளி, காய்ச்சல், ஹைபராக்சிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் பிற வியாதிகளையும் குணப்படுத்த உதவுகிறது. மேலும், உங்கள் உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு காரணமான கல்லீரலை சுத்தப்படுத்தும் திறன் எலுமிச்சைக்கு உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.