/tamil-ie/media/media_files/uploads/2020/06/sandesh-2.jpg)
Immunity Sandesh a blend of Tulsi, Turmeric, bay leaf, saffron and Himalayan honey
Immunity Sandesh a blend of Tulsi, Turmeric, bay leaf, saffron, and Himalayan honey : இந்தியாவில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான உணவுக்கு பெயர் பெற்றது. தென்னிந்தியாவில் இட்லி தோசை என்றால், மும்பை, கொல்கத்தா பகுதிகளில் சாட்களும், இனிப்பு வகை உணவுகளும் ரொம்ப ரொம்ப ஃபேமஸ் தான். மேற்கு வங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட சந்தேஷ் இனிப்பு வகை பால் மற்றும் சர்க்கரை, காய்ந்த திராட்சை மற்றும் உலர் பழங்கள் கொண்டு உருவாக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு நம் அனைவருக்கும் கற்று தந்த பாடம் என்னவென்றால், நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால் எல்லாம் சிரமம் தான். அதனால் தான் தற்போது நாம் உண்ண வேண்டிய உணவு அனைத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றோம்.
கொல்கத்தாவில் இருக்கும் ஸ்வீட் கடைக்காரர், மிகவும் வித்தியாசமான முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளார். துளசி, மஞ்சள், லவங்க இலை, அதிமதுரம், குங்குமப்பூ உள்ளிட்ட 15 மூலிகைகள் கொண்ட அருமையான சந்தேஷ் ஒன்றை தயாரித்துள்ளார். இதற்கு இனிப்பு சேர்ப்பதற்காக, இமயமலை தேன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
கேட்கும் போதே சுவையாக இருக்கும் இந்த சந்தேஷ் தற்போது கொல்கத்தா தெருக்களில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதாம். உங்களுக்கு யாராவது பெங்காலி நண்பர்கள் இருந்தால் உடனே போனை போட்டு, ஸ்வீட் ரெசிபி என்னன்னு விசாரிங்க!
புகைப்படங்கள் உதவி : கொல்கத்தாவில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்பட கலைஞர் பார்த்தா பால்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.