Advertisment

பாதாம், தயிர், மஞ்சள்... நோயை விரட்ட எளிய உணவு முறைகள்

How to boost immune system naturally: தயிரில் அடங்கியுள்ள வைட்டமின் டி சத்து காய்ச்சல் மற்றும் flu ஆகியவற்றை தடுக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Healthy life, diet, healthy diet, immunity boosters, immunity boosting foods, almonds, haldi, yogurt, monsoon immunity, indianexpress.com,, diet news, diet news in tamil, diet latest news, diet latest news in tamil

immunity foods, immunity home made foods, immunity badam, immunity by curd, immunity by turmeric, நோய் எதிர்ப்பு உணவு, கொரோனா தடுப்பு உணவு

Immunity News In Tamil: மழைக்காலம் சுட்டெரிக்கும் கோடையின் கடுமையான வெப்பத்திலிருந்து விடுதலையை தருகிறது. இஞ்சி கலந்த தேனீருடன் பக்கோடா சாப்பிடுவது இந்த மழை காலத்தில் சிறந்த அனுபவமாக இருக்கும். ஆனால் மழைக்காலம் மகிழ்ச்சியோடு சேர்த்து பல பருவகால நோய்களையும் கொண்டு வருகிறது. அவை அனைத்தும் தண்ணீரால் மட்டும் வருவது இல்லை. மழைகாலங்களில் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது, இதன் காரணமாக பொதுவான காய்ச்சல், வைரஸ் தொற்றுக்கள், செரிமான பிரச்சனைகள் மற்றும் flu ஆகியவை நமக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது, என புது டில்லியை சேர்ந்த Max Healthcare நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் Ritika Samaddar கூறுகிறார். எனவே மழை காலத்தை எதிர்கொள்ள நமக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. அதை குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் மேம்படுத்திக் கொள்ளலாம்.

Advertisment

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த கிழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மூன்று உணவுகளையும் உங்கள் டயட்டுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்

பாதாம் (Almonds)

immunity foods, immunity home made foods, immunity badam, immunity by curd, immunity by turmeric, நோய் எதிர்ப்பு உணவு, கொரோனா தடுப்பு உணவு Immunity Foods: பாதாம்

பாதாமில் மெக்னீசியம், புரதம், துத்தநாகம், riboflavin போன்ற 15 ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இதுதவிர இதில் வைட்டமின் இ சத்தும் உள்ளது, இது ஒரு antioxidant ஆக செயல்பட்டு நுரையீரல் நோய் எதிர்ப்பு செயல்பாடுக்கு உதவுகிறது. பாக்டீரியா மற்றும் வைரஸால் ஏற்படும் தொற்றுக்களிலிருந்து பாதுக்கப்பையும் வைட்டமின் இ வழங்குவதாக அறியப்படுகிறது. பாதாம் ஒரு வசதியான நொறுக்கு தீனி இதை நாளின் எந்த நேரத்திலும் எங்கும் சாப்பிடலாம். பாதாமை உங்களுக்கு விருப்பமான சுவையுடன் சேர்த்து சுவையான நொறுக்கு தீனியாகவும் சாப்பிடலாம்.

தயிர்

immunity foods, immunity home made foods, immunity badam, immunity by curd, immunity by turmeric, நோய் எதிர்ப்பு உணவு, கொரோனா தடுப்பு உணவு Immunity Foods: தயிர்

தயிரில் அடங்கியுள்ள Probiotics அல்லது நல்ல பாக்டீரியா உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவை உங்கள் குடல் ஆரோக்கியமாக இயங்க உதவுகிறது இது நோய்களை எதிர்த்துப் போராடுவதற்காக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. தயிரில் அடங்கியுள்ள வைட்டமின் டி சத்து காய்ச்சல் மற்றும் flu ஆகியவற்றை தடுக்கிறது. நறுக்கிய பழங்கள் மற்றும் கொட்டைகளுடன் சேர்த்தும் தயிரை சாப்பிடலாம்.

மஞ்சள்

immunity foods, immunity home made foods, immunity badam, immunity by curd, immunity by turmeric, நோய் எதிர்ப்பு உணவு, கொரோனா தடுப்பு உணவு Immunity Foods: மஞ்சள்

மஞ்சள், இந்தியாவில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த நறுமணப் பொருட்களில் ஒன்றாகும். மேலும் இதில் கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, துத்தநாகம் உட்பட 300 ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்க உதவக்கூடிய அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) பண்புகளை மஞ்சள் கொண்டிருப்பதாகவும் அறியப்படுகிறது. வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரிய எதிர்ப்பு பண்புகளை இது கொண்டுள்ளது, இவை உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை வலுப்படுத்துகிறது. மஞ்சளை, பாலுடன், நெய் மற்றும் மிளகு சேர்த்து அருந்தலாம்.

மழை காலத்தில் நோய்வாய்ப்பட்டு அருமையான இந்த காலத்தை அனுபவிக்காமல் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நமது உடலை நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய நேரம் இது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment