Immunity Tips: எதைச் சாப்பிடணும்? எதைச் சாப்பிடக் கூடாது?

Immunity Boosting Foods against coronavirus: பச்சைக் காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்புகள், முழுதானிய உணவுகள், தூய்மையான எண்ணெய்கள் ஆகியவற்றை முடிந்த அளவு பயன்படுத்துவது...

By: Updated: August 27, 2020, 08:32:03 AM

Immunity Tamil News, Immunity Boosting Foods against coronavirus:  மொத்த உலகமும் COVID-19 எனும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமியுடன்  போராடி வருகிறது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, உடற்பயிற்சி செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, அரசின் வழிமுறைகளை பின்பற்றுவது போன்ற செயல்பாடுகள் மூலம் இந்த நோயை நாம் எதிர்த்துப் போராடலாம்.

பெருந்தொற்று காலத்தில், நீரிழப்பு (dehydration ), ஊட்டச்சத்து குறைபாடு (malnutrition), வீக்கம் (inflammation), சோர்வு (fatigue), உடற்பயிற்சியின்மை (lack of exercise), தீய உடல் நலப்  பழக்கங்கள் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் பிரபால் டெப் தெரிவித்தார்.

Immunity Boosting Foods against coronavirus: நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள்

குறைந்தது எட்டு மணிநேர தூக்கம், தினமும் 8 முதல்  10 டம்ளர் தண்ணீர் , ஒரு சீரான உணவு,  தினசரி உடற்பயிற்சி ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியின் அடிப்படைகளாக உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை  கைவிட்டாலும், உடலிலும் மனதிலும் மோசமான  விளைவுகள் எற்படும்.

“கூடுதலாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் nutrient supplements (கூடுதல் உணவூட்டல்) and food fortification   அதிக நன்மை பயக்கின்றன. நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை  நிவர்த்தி செய்ய அவை உதவுகின்றன. உலகளவில், இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்”என்றார்.

 


உடற்பயிற்சியை வாரத்திற்கு  குறைந்தது 3-5 நாட்கள்  20 – 60 நிமிடங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் டாக்டர் பிரபால் டெப்  கூறுகிறார்.

கொரோனாவுக்கு எதிராக எந்த குறிப்பிட்ட சிகிச்சையும், தடுப்பு மருந்தும், மருத்துவப் பரிந்துரைகளும் இல்லாத நிலையில், பச்சைக் காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்புகள், முழுதானிய உணவுகள், தூய்மையான எண்ணெய்கள் ஆகியவற்றை முடிந்த அளவு பயன்படுத்துவதும், சோடா, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு உபயோகத்தைக் குறைப்பதும், சத்தற்ற, சர்க்கரை அதிகமுள்ள உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவற்றை உலக சுகாதார நிறுவனம், பிரிட்டிஷ் டயட்டெட்டிக்ஸ் சங்கம், மற்றும் யுடி உணவு மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. உணவைத் தவிர, உடற்பயிற்சி, தியானம், போதிய தூக்கம் மற்றும் சூரிய ஒளி உடலின் மீது படுதல் ஆகியவற்றையும் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன என்று ஜோதி சர்மா / எஸ்.கே. வர்ஷ்னி தங்கள் சிறப்புக் கட்டுரையில் ( Food and Immunity: Correlation to combat against COVID-19) தெரிவித்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:How to improve good immunity to combat against covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X