முடக்குவாதம் அபாயம்? இந்த பருப்பு மட்டும் சாப்பிடக் கூடாதாம்: விளக்கும் டாக்டர் கார்த்திகேயன்
கேசரி பருப்புகளில் இருக்கும் நச்சுத் தன்மை குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இவை நம் உடலில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவு பொருட்களை பொறுத்த வரை அனைத்துமே நம் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியது என்று கூற முடியாது. சிலவற்றில் இருக்கும் நச்சுத் தன்மை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்த வகையில் நாம் சாப்பிடக் கூடாது பருப்பு வகை ஒன்றை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Advertisment
கேசரி பருப்புகளை எக்காரணம் கொண்டும் நாம் சாப்பிடக் கூடாது என மருத்துவர் கார்த்திகேயன் வலியுறுத்துகிறார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் அனைத்து விதமான உணவுகளும் கிடைக்கவில்லை. அப்போது, பசி, பஞ்சம் ஆகியவை அதிகப்படியாக இருந்தன.
இது போன்று பஞ்சம் நிறைந்த காலத்தில் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் பருப்பாக கேசரி பருப்புகள் விளங்கியதாக மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். இந்த பருப்புகள் சுவையாகவும், சீக்கிரம் வெந்து விடும் தன்மையிலும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் இவை வளரும் என்பதால் பஞ்சம் இருந்த காலத்திலும் எளிதாக கிடைத்தது.
அதே சூழலில், வட இந்தியா பகுதிகளில் மக்களுக்கு அதிகப்படியான முடக்கு வாதம் நோய் ஏற்பட்டது. கேசரி பருப்புகளை மக்கள் அதிகமாக எடுத்துக் கொண்டதால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இதில் இருந்து வெளிப்படும் பீட்டா ஆக்சிலில் அமினோ அலனின் என்ற நச்சு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
Advertisment
Advertisements
இதன் காரணமாகவே 1962-ஆம் ஆண்டு கேசரி பருப்பை யாரும் பயிரடக் கூடாது என்றும், இதனை மக்கள் சாப்பிடக் கூடாது என்றும் இந்திய அரசு அறிவித்தது. இத்தகைய நச்சு நிறைந்த கேசரி பருப்புகளை மக்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.