முருங்கைக்காயில் அதிக நன்மைகள் இருக்கிறது. உடலுக்கு தேவையான சத்துக்கள் இதில் உள்ளது. ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமின் சி-யைவிட 7 மடங்கு அதிக வைட்டமின் சி அளவை இது கொண்டுள்ளது. வாழைப்பழத்தைவிட 15 மடங்கு அதிக பொட்டாஷியம் கொண்டது. இதில் இரும்பு சத்து, கால்சியம், ஆண்டி ஆக்ஸிடண்ட், அமினோ ஆசிட் உள்ளது. இந்நிலையில் இதன் இலை, பூக்கள் மற்றும் வேர்கள் வரை நாம் பயன்படுத்தலாம். ரத்த சோகையை இது விரைவாக குணப்படுத்தும்.
இந்நிலையில் முருங்கை வைத்து மூன்று முக்கிய ரெசிபிக்களை தெரிந்துகொள்வோம்.
முருங்கை கிரையை நாம் முடிந்தால் தினமும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். இதில் வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடண்ட், அமினோ ஆசிட் உள்ளது.
முதல் ரெசிபி
முருங்கை இலையை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து வதக்கி கொள்ளவும். வேர்கடலை, சீரகம், வத்தலை சேர்த்து அரைத்துகொள்ளவும். இதை காய்கறிகளுடன் உள்ள முருங்கை இலையில் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் உப்பு சேர்த்துகொள்ளுங்கள்.
கிரைக் கடயல்
முருங்கை இலை, பூண்டு, உப்பு சேர்த்து அத்துடன் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். தொடர்ந்து பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து, அதில் வத்தலை சேர்த்துகொள்ளுங்கள். இதை கீரையில் சேருங்கள்.
கீரை சாம்பார்
1 கைபிடி முருங்கை இலை, 1 கப் பருப்பு, 15 சின்ன வெங்காயம், 2 தக்காளி, 5 பச்சை மிளகாய், 4 வத்தல் மிளகாய், சிறிய பந்து அளவில் புலி, 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, 1 ½ டேபிஸ் ஸ்பூன் மிளகாய் பொடி, 1 டேபிஸ் ஸ்பூன் கொத்தமல்லி பொடி, 2 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி, 1 டேபிஸ் ஸ்பூன் வெந்தயம், 1 டேபிள் ஸ்பூன் கடுகு, தேவையான அளவு உப்பு, எண்ணெய்
செய்முறை: பருப்பை வேக வைக்கவும். தொடர்ந்து தனியாக முருங்கை இலை மற்றும் முருங்கைக்காய்யை வேக வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, கொத்தமல்லி பொடி ஆகியவற்றை சேர்க்கவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் வேக வைத்த பருப்பை சேர்க்கவும். தொடர்ந்து முருங்கை இலை மற்றும் முருங்கைக்காய்யை சேர்க்க வேண்டும். தொடர்ந்து உப்பு சேக்க வேண்டும். இவைற்றை அனைத்தையும் கொதிக்க வைக்க வேண்டும். கடைசியாக எண்ணெய் சூடு செய்து அதில் கடுகு, வத்தல், கருவேப்பிலை சேர்த்து சாம்பாரில் கொட்ட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“