முருங்கை இலையில், கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின்ஸ் மற்றும் அமினோ ஆசிட் உள்ளது. இந்நிலையில் முருங்கை இலைப் பொடியை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
இந்நிலையில் முருங்கை இலைகளை நன்றாக கழுவி, துணியில் பரப்பிக்கொள்ளவும். அதன் மேலே இனியொரு துணியை போட்டு வெயிலில் காய வைக்கவும். தொடர்ந்து இதை மிக்ஸியில் சேர்த்து பொடி செய்துகொள்ளவும்.
இது உடல் எடை குறைய உதவும். முருங்கை இலையில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது. இந்நிலையில் முருங்கை நீர் குடித்தால், அதிக சக்தியை உற்பத்தி செய்கிறது. மேலும் கொழுப்பு சேகரிப்பை குறைக்கிறது.
இந்நிலையில் முருங்கை இலை ஜீரணத்தை ஊக்குவிக்க உதவுகிறது. இந்நிலையில் குறிப்பாக மலச்சிக்கல், வயிறு உப்புதலை குணப்படுத்துகிறது.
இதில் அதிக அளவில் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆன க்யுயர்சிட்டின் மற்றும் க்ளோரோஜெனிக் ஆசிட் உள்ளது. இந்நிலையில் இவை உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி சில நோய்களை தடுக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இந்நிலையில் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனால் இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறையும். முருங்கை இலையில் உள்ள சிங் சத்து ரத்த சர்க்கரையை குறைக்கும்.
இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இந்த சத்து மிருதுவான சருமத்தை கொடுக்குகிறது. மேலும் வயதாவதை தள்ளிப் போடுகிறது.
முருங்கை நீர் செய்வது எப்படி?
1 கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தொடர்ந்து 1-2 டேபிள் ஸ்பூன் முருங்கை பொடியை சேர்க்கவும். இதில் உப்பு, தேனை சேர்க்கவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“