அலகாபாத்தில் நடைபெறவுள்ள கும்பமேளாவுக்காக அந்த பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் மசூதியின் ஒரு பகுதியை இடித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் என்றாலே மதம்சார்ந்த பிரச்சனை அடிக்கடி எழுவதாக பரவலாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. ஆனால் அந்த செய்திகளில் சிறிதளவும் உண்மை இல்லை என்பது தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக கும்பமேளா நடைபெற்று வருகிறது.
கும்பமேளாவின் போது நடத்தப்படும் புனித நீராடலுக்கு நாடு முழுவதில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுந்தோறும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரபிரதேச அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சாலைகளை விரிவுபடுத்தி வருகிறது. இதற்கு தடையாக இருக்கும் கட்டிட உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களாகவே அவற்றை இடிக்கச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
அலகாபாத் நகரில் ராஜ்ருப்பூர் பகுதியில் ‘மஸ்ஜீத் எ காதிரி’ எனும் மசூதி உள்ளது. இதன் ஒரு பகுதி சாலை விரிவாக்க பணிக்கு தடையாக இருந்ததால் உத்தரபிரதேச அரசின் கீழ் செயல்படும் அலகாபாத் வளர்ச்சி ஆணையமானது,அந்தப் பகுதியை மட்டும் இடிக்குமாறு அந்த பகுதி இஸ்லாமிய மக்களிடன் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த கோரிக்கையில் இருக்கும் உண்மை நிலவரத்தை புரிந்துக் கொண்ட அந்த பகுதி முஸ்லீம் மக்கல், கடந்த மூன்று நாட்களாக தங்கள் சொந்த செலவிலேயே மசூதியின் ஒரு பகுதியை இடித்து வருகின்றனர். , இந்துக்களுக்காக முஸ்லிம்கள் தங்கள் மசூதியை இடிக்க முன்வந்த சம்பவம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. மதநல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக பல்வேறு தரப்பினரும் இதை பாராட்டி வருகின்றனர்.
இதுக்குறித்து பேசியுள்ள அந்த பகுதி இஸ்லாமிய மக்கள், “ இந்து சகோதரர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். புனித நீராட வரும் இந்து சகோதரர்களின் தேவைகளை உணர்ந்து சூதியின் ஒரு பகுதியை இடிப்பது என நாங்கள் முடிவு செய்தோம்” என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.