In my feeling challenge: வெளிநாட்டு பாப் சிங்கர் ட்ரேக் பாடிய கிகி டூ யூ லவ் மீ பாடல் இணையத்தில் மிகப்பெரிய சேலஞ்சாக உருவெடுத்துள்ளது.
Advertisment
ஆபத்து நிறைந்திருக்கும் In my feeling challenge கிகி சேலஞ்:
சமீப காலங்களில் சேலஞ் என்ற பெயரில் பல விஷயங்கள் பிரபலமாகி வருகிறது. இணையத்தளத்தில் முதன் முதலில் பெரிய அளவில் பிரலமடைந்தது ‘ஐஸ் பக்கெட்’ சேலஞ் தான். இதனை உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள், பிரபலங்கள், வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் முயற்சித்தனர். அப்போது முதல் இன்று வரை பல விஷயங்களை சேலஞ் என்று போஸ்ட் செய்து அதனை அடுத்தவர்களுக்குச் சவால் விடுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஃபிட்னஸ் சேலஞ் என்று ஒன்று அதிக அளவில் டிரெண்டானது. இதனை பிரதமர் மோடியும் செய்து வீடியோ வெளியிட்டதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் ஒரு சில சேலஞ்கள் விளையாட்டாகவும் ஆபத்தில்லாமல் இருந்தாலும் சில சவால்கள் உயிரைப் பறிக்கும் வகையில் உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறிதும் யோசிக்காமல் மக்களும் அதனைச் செய்து வருகின்றனர்.
ஆபத்துகள் நிறைந்த விளையாட்டுகள் விபரீதத்தில் முடியும் என்பதற்கு மற்றொரு உதாரணமாக இருக்கிறது கிகி சாலஞ். பாப் பாடகர் டிரேக் பாடியுள்ள பாடலுக்கு ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடிவிட்டு மீண்டும் அதே காரில் ஏறி உட்கார வேண்டும்.
Advertisment
Advertisements
இதனை வெளிநாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர். தமிழ் சினிமா நடிகை ரெஜினாவும் இதுபோல் நடனமாடி வீடியோ வெளியிட்டார்.
ஆபத்து நிறைந்த இந்த சவாலை நடிகை ரெஜினாவும் செய்திருப்பதால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு நிறைந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும், சினிமா பிரபலங்கள் இவ்வாறு செய்வதால் தான் ரசிகர்களும் இதை முயற்சி செய்கிறார்கள். எனவே பொதுமக்கள் ஆபத்தான சவால்களை மேற்கொள்ள தூண்டும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இது எவ்வளவு ஆபத்தானது என்று ராஜஸ்தான் போலீஸ் வீடியோ ஆதாரத்துடன் எச்சரித்துள்ளது. குடிபோதையில் வண்டி ஓட்டுவது எவ்வளவு ஆபத்தோ அது போலவே நடுரோட்டிலும், ஓடும் வண்டியில் இருந்து இறங்கி கிகி சேலஞ் செய்வதும் ஆபத்து என்று கூறியுள்ளனர்.
Drinking while driving is injurious to health, so is #KikiChallenge. Think twice before doing this stupid stunt on roads as it's fraught with dangers and can throw tragic surprises!
— Rajasthan Police (@PoliceRajasthan) 31 July 2018
இந்த விழிப்புணர்வை தற்போது போக்குவரத்து போலீசார் வெகுவாக பரவி வருகின்றனர். மக்கள் இதுபோன்ற ஆபத்து அளிக்கும் செயல்களை விளையாட்டிற்காகவும் செய்யக் கூடாது என்று கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news