வருமான வரி தாக்கல் செய்யத் தயாரா? படிவங்களை எளிதாக நிரப்ப இதோ வழிமுறை

Income Tax Return : நிதியாண்டு 2019-20 ல் சம்பாதித்த வருமானத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்ட தனிநபர்கள், தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டியும் வருமான வரி தாக்கல் படிவங்களை வெளியிட்டுள்ளனர்

By: July 4, 2020, 9:08:04 AM

Income Tax Returns: மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes -CBDT) கடந்த மே 29, 2020 ஆம் தேதி மதிப்பீட்டு ஆண்டு 2020-21 க்கு உரிய வருமான வரி தாக்கலுக்கான 7 படிவங்களையும் அறிவித்துள்ளது (notified). மேலும் நிதியாண்டு 2019-20 ல் சம்பாதித்த வருமானத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்ட தனிநபர்கள், தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டியும் வருமான வரி தாக்கல் படிவங்களை வெளியிட்டுள்ளனர்.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் அறிவிக்கப்பட்ட (notified) வருமான வரி தாக்கலுக்கான படிவங்கள்

ITR-1 (Sahaj): சம்பளம் மூலம் வருமானம் பெறும் தனிநபர்கள், ஒரு வீட்டு சொத்து, மற்ற இனங்கள் (வட்டி போன்றவை) மற்றும் மொத்த வருமானம் ரூபாய் 50 லட்சம் வரை உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டியது.
ITR-2: தனிநபர்கள் மற்றும் எந்தவொரு தனி உரிமையின் கீழும் வணிகம் அல்லது தொழில் மேற்கொள்ளாத பிரிக்கப்படாத இந்து குடும்பங்களால் (Hindu Undivided Families) பயன்படுத்தப்பட வேண்டியது.
ITR-3: வணிகம் அல்லது தனியுரிமை தொழில் மூலம் வருமானம் பெறும் தனிநபர்கள் மற்றும் பிரிக்கப்படாத இந்து குடும்பங்களால் பயன்படுத்தப்பட வேண்டியது.
ITR-4 (Sugam): ஊகத்தை அடிப்படையாக கொண்ட வணிகம் அல்லது தொழில் செய்பவர்களால் பயன்படுத்தப்பட வேண்டியது.
ITR-5: (i) தனிநபர்கள், (ii) பிரிக்கப்படாத இந்து குடும்பங்கள், (iii) நிறுவனங்கள் மற்றும் (iv) Form ITR-7 தாக்கல் செய்யும் நபர்கள் தவிர மற்றவர்களால் பயன்படுத்தப்பட வேண்டியது.
ITR-6: பிரிவு 11 இன் கீழ் விலக்கு கோரும் நிறுவனங்களைத் தவிர வேறு நிறுவனங்களால் பயன்படுத்தப்பட வேண்டியது.
ITR-7: sections 139(4A) or 139(4B) or 139(4C) or 139(4D) or 139(4E) or 139(4F) பிரிவுகளின் கீழ் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டிய நபர்களால் (நிறுவனங்கள் உட்பட) பயன்படுத்தப்பட வேண்டியது.

மதிப்பீட்டு ஆண்டு 2020-21 க்கான வருமானத்தை ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்வதற்காக குறிப்பிடப்பட்ட 7 படிவங்களில் Forms – ITR-1, ITR-2 மற்றும் ITR-4 ஆகிய மூன்று படிவங்கள் மட்டும் தான் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள படிவங்கள் ஆப்லைன் மூலமாக மட்டும் தான் கிடைக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Income tax return covid 19 lockdown who can file itr offline tds

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X