விந்தணு குறைய வாய்ப்பு… இந்த உணவுகளை தவிருங்க; டாக்டர் யோக வித்யா
ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய மன அழுத்தம், புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், எலக்ட்ரானிக்ஸ், தூக்கமின்மை உள்ளிட்டவை காரணங்களாக உள்ளன. விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க டாக்டர் யோகா வித்யா சில டிப்ஸ்களை ப் பகிர்ந்துள்ளார்.
ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய மன அழுத்தம், புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், எலக்ட்ரானிக்ஸ், தூக்கமின்மை உள்ளிட்டவை காரணங்களாக உள்ளன. விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க டாக்டர் யோகா வித்யா சில டிப்ஸ்களை ப் பகிர்ந்துள்ளார்.
விந்தணு குறைய வாய்ப்பு… இந்த உணவுகளை தவிருங்க; டாக்டர் யோக வித்யா
விந்தணு எண்ணிக்கை அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் இன்றைய தலைமுறையினரிடம் ஒரு குழப்பம் உள்ளது. 1990-களில் 45 மில்லிக்கு கீழ் உள்ள விந்தணுக்கள் குறைவான விந்தணுக்களாக கருதப்பட்டன. 2010 காலகட்டத்தில் 15 மில்லிக்கு கீழ் உள்ள விந்தணுக்கள்தான் குறைவான விந்தணுக்கள் என உலக சுகாதார அமைப்பு கூறியதாக மருத்துவர் யோக வித்யா கூறினார். இப்படி ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய மன அழுத்தம், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், தூக்கமின்மை உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாக உள்ளன. இதனால், ஆண்கள் தந்தையாகும் வாய்ப்பும் பல மடங்கு குறைகிறது. இருப்பினும், சில ஆயுர்வேத நடைமுறைகள் மூலம் விந்தணுக்கள் தரத்தை மேம்படுத்தலாம். அந்த வகையில், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க டாக்டர் யோகா வித்யா சில டிப்ஸ்களை ப் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக எத்னிக் ஹெல்த்கேர் டாக்டர்.பி.யோகா வித்யா எனும் யூடியூப் சேனலில் அவர் பேசுகையில்,
Advertisment
ஒரு விந்து மாதிரியில் 80 முதல் 120 மில்லி விந்தணுக்கள் இருக்க வேண்டும். இப்படி இருக்கும்பட்சத்தில் இயற்கையாகவே கரு உருவாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, விந்து மாதிரியில் 30% விந்தணுக்கள் செயலில் இருக்க வேண்டும். அவற்றின் வேகம் 25μm/s ஆக இருக்க வேண்டும். இது மிக முக்கியமான பகுதியாகும். விந்தணுவின் வடிவம் தலை, கழுத்து மற்றும் வால் என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உங்கள் விந்தணுவின் தரம் சரியானது என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதை தெரிந்துக் கொள்வது முக்கியம்.
விந்தணுவின் தலைப்பகுதி எப்போதும் ஓவல் வடிவமாக இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் அக்ரோசோம் உள்ளது. நடுப்பகுதியை கழுத்து என்றும் அழைக்கலாம். இது விந்தணுவின் வலிமையான பகுதி. இந்த பகுதியில் மைட்டோகாண்ட்ரியா உள்ளது, இது நீந்த உதவுகிறது. விந்தணுவின் 3-வது பகுதி வால் ஆகும், இதில் புரதம் உள்ளது. இதன் உதவியுடன், அது முன்னோக்கி நகர முடியும். தலை முதல் வால் வரை ஒரு விந்தணுவின் மொத்த அளவு 0.05 ஆகும். விந்தணுக்கள் விந்து வடிவில் வெளிவரும். பெண்ணின் கருப்பைக்குள் விந்தணு சென்றவுடன் அதன் ஆயுட்காலம் 3 முதல் 5 நாட்கள் ஆகும்.
Advertisment
Advertisements
விந்தணுக்களின் தரத்தை எப்படி மேம்படுத்துவது?
அதிகப்படியாக, காரம் மற்றும் புளிப்பு சுவை நிறைந்த உணவுகள் சாப்பிடுவதும் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தலாம் என மருத்துவர் யோகா வித்யா தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக உணவில் இயற்கையான இனிப்பு வகை சேர்த்துக் கொள்வதன் மூலம் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று அவர் கூறுகிறார். இதேபோல், உடல் வெப்பம் அதிகரிப்பதால் ஆண்மைக் குறைவு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதிகமாக இருசக்கர வாகனங்களில் பயணிப்பது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருப்பது, விதைப்பைகள் வீக்கம் போன்றவற்றால் ஆண்மைக் குறைவு ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜீன்ஸ் பேன்ட் போன்ற இறுக்கமான ஆடைகள் உடுத்துவதும் ஆண்மைக் குறைவிற்கு காரணமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் விந்தணுக்கள் பரிசோதனை தொடர்பாக ஆய்வுக் கூடங்களுக்கு செல்வதற்கு முன்பாக வீட்டிலேயே எளிமையான முறையை பின்பற்றலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். இதன் மூலம் விந்தணுக்கள் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்று அறிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, விந்தணுவை ஒரு கிளாஸ் நீரில் போடும் போது, அவை நேராக தண்ணீரின் அடிப்பகுதிக்கு சென்றால் அவை ஆரோக்கியமாக இருக்கிறது என்ற அர்த்தம் என மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த விந்தணு விரைவாக கரைந்து தண்ணீரின் மேற்பகுதியில் மிதந்தால், அது ஆரோக்கியமாக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், இது குறித்த துல்லியமான முடிவுகளை பெற விரும்புபவர்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற நம்பகமான ஆய்வுக் கூடங்களுக்கு சென்று பரிசோதிக்கலாம்.
வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது, குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுவது, காட்டன் ஆடைகளை உடுத்துவது, செல்போனை நீண்ட நேரம் பேன்ட் பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தாதது ஆகியவற்றை கடைபிடிக்கலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
சின்க் சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செவ்வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றையும் சாப்பிடலாம் என மருத்துவர் யோகா வித்யா தெரிவித்துள்ளார். மேலும், பிரச்னை தீவிரமாக இருப்பவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் விந்தணுக்கள் தொடர்பான பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.