சுதந்திர தின வாழ்த்துகள்: நண்பர்களுக்கு பகிர வண்ணப் படங்கள்!
74th Independence Day 2020 Quotes, Wishes, Whatsapp Status : ஒவ்வொரு ஆண்டும் கலைநிகழ்ச்சிகள், கண்கவர் அணிவகுப்புகள் என களைகட்டும் சுதந்திர தினம், இந்தாண்டு கொரோனா தொற்று பரவலால் பொலிவிழந்துள்ளது
Independence Day 2020 Wishes, Whatsapp Status, Images : பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியா நாடு, எண்ணற்ற போராட்ட தியாகிகளின் முயற்சியால், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, இந்தியா விடுதலை பெற்றது. இந்த நிகழ்வின் மூலம், வெள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நாம் விடுதலை அடைந்தோம். இந்த நாள், இந்தியர்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் மிக முக்கியமான நாள் ஆகும்.
Advertisment
2020, ஆகஸ்ட் 15ம் தேதி நாடு விடுதலை அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடைகையில், நாம் 74வது ஆண்டு சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாட உள்ளோம். இந்த நாள் தேசிய விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது. மக்கள் கைகளில் மூவர்ண தேசியக்கொடியை ஏந்தி வீதிகளில் பெருமையுடன் வலம்வருவர். இந்த நாளை மேலும் கோலாகலமாக கொண்டாடும் பொருட்டு, பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு, கலை, பாரம்பரியப் போட்டிகள் நடத்தப்படும். சுதந்திர போராட்டத்திற்காக தன்னுயிரை ஈன்ற தியாகிகளுக்கு கவுரவம் செலுத்தும்வகையிலான நிகழ்வுகள் நடத்தப்படும்.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, நாட்டின் முதல் சுதந்திர தினத்தில், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, செங்கோட்டையில் உள்ள லாகூர் கேட்டில் சுதந்திரக்கொடியை ஏற்றி வைத்தார். அமைதியான வழியில், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தேசப்பிதா காந்தி அடிகள், கோல்கட்டாவில் உண்ணாவிரதப்போராட்டம் உள்ளிட்ட அமைதிவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தநாளில், செங்கோட்டையில் அப்போதைய பிரதமர்கள் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர். நாட்டில் சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் உள்ளிட்ட நாட்கள் தேசிய விடுமுறையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. சுதந்திர தினத்திற்கு முதல்நாள், ஜனாதிபதி, நாட்டுமக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுவார்.
ஒவ்வொரு ஆண்டும் கலைநிகழ்ச்சிகள், கண்கவர் அணிவகுப்புகள் என களைகட்டும் சுதந்திர தினம், இந்தாண்டு கொரோனா தொற்று பரவலால் பொலிவிழந்துள்ளது. நாட்டு மக்களாகிய நாம், வீட்டிலேயே இருந்தவாறே, தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து, நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தை , உறவினர்கள், இந்தியர்கள் அனைவருடன் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டாடி மகிழ்வோமாக...
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil