இந்தியா என்பது பாரத், பல்வேறு மாநிலங்களின் ஒன்றாக கொண்டது. இந்நிலையில் தன்னாட்சி பெற்ற நாடாக மாறிய இந்தியாவை இப்படி குறிப்பிடுகிறார்கள். இந்நிலையில் இந்திய சட்டத்தின், ஆர்டிகல் 1 ஆக இது மாறியது. இந்நிலையில் இது தொடர்பாக பல்வேறு காலக்கட்டங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஆர்டிகல் 1 பற்றிய முதல் வாக்குவாதம் 1948ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் கோவிந்த் பல்ல பந்த் என்பவரின் ஆலோசனையால், இந்தியாவின் பெயர் தொடர்பான விவாதம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் செப்டர்ம்பர் 17, 1949ம் ஆண்டு, டாக்டர் அம்பேத்கர், ஆர்டில் 1 தொடர்பாக இறுதி செய்யப்பட்ட வரையறையை நாடாளுமன்றத்தில் சம்பர்பித்தபோது, அதில் ’பாரத்’ மற்றும் ’இந்தியா’ என்ற இரண்டும் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியா என்பது காலனி ஆதிக்கத்தை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாக பலர் இந்தியா என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜபல்பூரைச் சேர்ந்த செத் கோவிந்த் தாஸ் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்ற பெயரை தேர்வு செய்யலாம் என்று கூறினார். இந்நிலையில் இந்தியா என்ற பெயர் பாரத் என்பதன் ஆங்கில மொழியாகம் என்று சிலர் கூறினர்.
மேலும் செத் கோவிந்த் கூறுகையில் ’இந்தியா என்ற பாரத் என்பது அழகான சொல் இல்லை. பாரத் என்பதுதான் இந்தியா என்பதை வெளிநாடுகளும் ஏற்றுக்கொள்ளும்படி நாம் அமைக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஹரி விஷ்னு கமாத் கூறுகையில், ஐரிஷ் சட்டத்தை உதாரணமாக காட்டி பாரத் என்ற வார்த்தையின் மொழியாக்கம் இந்தியா என்று அவர் கூறினார்.
ஹர்கோவிந்த் பந்த் கூறுகையில் ’வட இந்தியாவை சேர்ந்தவர்கள் பாரத்வர்ஷா என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதை மட்டுமே எதிர்ப்பார்க்கின்றனர்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் “ இந்தியா என்ற பெயர் அயல்நாட்டினரால் நமக்கு வழங்கப்பட்டது. நமது நாட்டின் வளங்களை திருட, நமது சுதந்திரத்தை பறித்துகொண்டனர். இந்நிலையில் இந்த பெயரை நாம் தேர்வு செய்தால், நம்மை இழிவுப்படுத்தும் வகையில் வெள்ளையர்கள் நமக்கு வைத்த பெயரை நாம் ஏற்றுக்கொள்ளும்படியாகிவிடும்” என்று கூறினார்.
தாஸ் கூறுகையில் விஷ்ணு பூரண, பிரம்ம பூரண என்பதும் ’பாரத்’ என்பதை குறிக்கும் என்று கூறினார். மற்றவர்கள் கூறுகையில் 7ம் நூற்றாண்டில் சீன பயணி ஹியூன் சாங் என்பவர், இந்தியாவை பாரத் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறினர்.
காமத் கூறுகையில் ”நமது வேதங்களில் இருந்து. பாரத், பாரத்வர்ஷா, பாரத்பூமி என்ற பெயர்களை பரிந்துரை செய்கிறேன்” என்று கூறினார்.
இந்நிலையில் இதுபோன்ற நாகரீகம் தொடர்பான விவாதம் தேவையில்லாதது என்று அம்பேத்கர் பல முறை பாராளுமன்றத்தில் நினைவுப்படுத்தினார். மேலும் பாரத் என்ற சொல்லுக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.
காமத் பேசியதற்கு பதில் அளித்த அம்பேத்கர் பாரத் என்ற சொல் இந்தியா என்ற சொல்லுக்கு பின்பு வர வேண்டும் என்பதற்காக இவ்வளவு விவாதம் தேவையா ? என்று கேட்டார்.
கிஷோர் மோகன் த்ரிபாதி பேசுகையில் ”பாரத் என்ற சொல் இந்தியாவின் கடந்த கால ஒளிமையமான வரலாறை நினைவுப்படுத்துவதாக உள்ளது” என்று நீளமாக உரையை பேசினார்.
அப்போது அம்பேத்கர் இது இப்போது தேவையா ? என்று கேட்டதுடன், நாம் செய்ய வேண்டிய பணி அதிகம் இருக்கிறது என்பதை குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.