இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு, இங்கு வெவ்வேறு மொழிகளை பேசும் மக்கள் ஒரு தாய் மக்களாக வாழ்கின்றனர். இந்தியா பாரம்பரியத்தின் நகரம். இங்கு நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டிய ஏராளமான இடங்கள் உள்ளன. அதிலும் தலைநகர் டெல்லியை சுற்றி ஏராளமான வரலாற்று கலச்சார தளங்கள் உள்ளன. இந்த குடியரசு தினத்தில் டெல்லியில் நீங்கள் இருந்தால், கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் இந்த குடியரசு தினத்தில் டெல்லியில் நீங்கள் இருந்தால், கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் இங்கே..
ஜெய்சல்மர்
'கோல்டன் சிட்டி' என்று அழைக்கப்படும் ஜெய்சால்மர் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 500 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஜெய்சல்மேர் கோட்டை, இங்கு நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் ஆகும், இதில் அரச அரண்மனை மற்றும் பல அலங்கரிக்கப்பட்ட ஜெயின் கோவில்கள் உள்ளன. டெல்லியிலிருந்து விமானம் மூலம் ஜெய்சால்மரை அடையலாம். (Unsplash)
ஜிம் கார்பெட் தேசிய பூங்கா
இந்த வனவிலங்கு சரணாலயம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது, கார்பெட் நீர்வீழ்ச்சி, கார்ஜியா தேவி கோயில் மற்றும் கலகர் அணை ஆகியவை அருகிலுள்ள மற்ற சுற்றுலா அம்சங்களாகும். நீங்கள் டெல்லியிலிருந்து கார் பயணம் மூலம் இந்த இடங்களை அடையலாம். (Unsplash)
ரணதம்பூர்
தென்கிழக்கு ராஜஸ்தானில் அமைந்துள்ள ரணதம்பூர் புலிகள் காப்பகத்திற்கும் ரணதம்போர் கோட்டைக்கும் பெயர் பெற்றது. நீங்கள் டெல்லியிலிருந்து ரந்தம்பூரில் உள்ள சவாய் மாதோபூர் ரயில் நிலையம் வரை ரயிலில் செல்லலாம். (Unsplash)
உதய்பூர்
ராஜஸ்தானின் தெற்குப் பகுதியில், குஜராத் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது இந்த நகரம். 'ஏரிகளின் நகரம்' என்று அழைக்கப்படும் இது வரலாற்று கோட்டைகள் மற்றும் அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், தோட்டங்கள் மற்றும் கட்டிடக்கலை கோயில்கள் - இவை அனைத்தும் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக ஆக்குகின்றன.
டெல்லியில் இருந்து உதய்பூருக்கு விமானம் மூலம் பயணம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. (Unsplash)
நைனிடால்
உத்தரகண்ட் மாநிலத்தில் குமாவோன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது நைனிடால். இது அழகிய நைனி ஏரி மற்றும் நைனா சிகரத்தை கொண்டுள்ளது. டெல்லியிலிருந்து நைனிடால் வரையிலான மொத்த சாலைப் பயணம் ஏழு முதல் எட்டு மணி நேரம் ஆகும். (Unsplash)
ஆக்ரா
உத்தரபிரதேச மாநிலத்தில் யமுனை நதிக்கரையில் உள்ளது ஆக்ரா நகரம். தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை நகரத்தை கலாச்சார மற்றும் வரலாற்று மையமாக மாற்றியுள்ளன. டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு கார் மூலம் பயணிக்கலாம். யமுனா விரைவுச் சாலை, நகரங்களுக்கு இடையே வேகமான பாதையை உருவாக்கியுள்ளது. (Unsplash)
சிம்லா
ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லா, காலனித்துவ கட்டிடக்கலை, தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் இயற்கை சூழலுக்கு பெயர் பெற்றது. இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நேச்சுரல் ஐஸ் ஸ்கேட்டிங் இங்குதான் உள்ளது. பெரும்பாலான பயணிகள் டெல்லியில் இருந்து சாலை மார்க்கமாக சிம்லா செல்ல விரும்புகிறார்கள். (Unsplash)
முசோரி
முசோரி, உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு பிரபலமான மலைவாசஸ்தலம் ஆகும். மலையேற்றம் மற்றும் ஜிப்லைனிங் போன்ற இயற்கை காட்சிகள் மற்றும் சாகச நடவடிக்கைகளுக்கு இது பிரபலமானது. டெஹ்ராடூன் நகரத்திற்கு ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது வண்டியைத் தேர்ந்தெடுத்து முசோரிக்கு செல்லலாம்.
ஜெய்ப்பூர்
ஜெய்ப்பூர் அல்லது பிங்க் சிட்டி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களான அமர் கோட்டை மற்றும் ஜந்தர் மந்தர் ஆகியவற்றின் தாயகமாகும். டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு நீங்கள் சாலைப் பயணத்தை மேற்கொள்ளலாம், இதற்கு தோராயமாக 5-6 மணி நேரம் ஆகும். (Image: Unsplash)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.