Advertisment

கொரோனா 2வது அலை: இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்பட காரணம் என்ன?

Corona second wave: இந்தியாவின் பல மாநிலங்களில் இளைஞர்கள் அதிகளவில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
corona india

கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை அதிக மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பல மாநிலங்களில் இளைஞர்களும், குழந்தைகளும் அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment

சண்டிகரில், ஜனவரி 1- 20ஆம் தேதி வரை 21-30 வயதுக்குட்பட்டவர்கள் அதிக அளவில் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மகாராஷ்ட்ராவின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் 22-39 வயதுடைய நபர்கள் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா டெல்லியில் உள்ள இளம் வயதினருக்கு கொரோனா பாதிப்பு அதிக அளவில் ஏற்படுவதாக கூறினார். இதற்கிடையில், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெரியவர்களை விட இளம் வயதினருக்கே தொற்று வேகமாக பரவி வருகிறது.

இருப்பினும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறும்போது, இரண்டாவது அலைகளில் வைரஸ் பாதிப்பை பார்க்கும்போது அதிக வயது வித்தியாசம் இல்லை என கூறியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இளைஞர்களிடையே தொற்று வீதத்தில் ஒரு சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் அலைகளில் 31% லிருந்து இரண்டாவது அலையில் 32% ஆக அதிகமாகி உள்ளது

ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்க்கவா கூறுகையில், இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் வெளியில் அதிகமாக நடமாடுகிறார்கள், கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மீறிச் செல்லும்போது பாதிக்கப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

புனேவின் கொலம்பியா ஆசிய மருத்துவமனையின் உள்மருத்துவம் மற்றும் தொற்று வியாதிக்கான மருத்துவர் மகேஷ்குமார் எம் லேகே இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு கூறியதாவது, இளைஞர்கள் சிறு சிறு நடமாடும் குழுவினராக உள்ளனர். ஆரோக்கியமாக உள்ளவர்களிடம் உள்ள வைரஸ் எந்த அறிகுறிகளும் இல்லாமல் மற்றவர்களுக்கு பரவுகிறது.

கொரோனா இரண்டாவது அலையில், இளைஞர்களில் கணிசமான எண்ணிக்கையினர் இணை நோய்களாலும், இணை நோய் ஏற்படுவதற்கான உடல்நிலையை கொண்டிருந்தால் அவர்களை தொற்று எளிதில் பாதிக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்கு அவை அறிகுறிகள் அற்றவையாகவே உள்ளன. இருப்பினும், தொற்று பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவிலானோர் மூச்சு திணறலால் பாதிக்கப்படுவது மற்றும் ஆக்சிஜன் அளவு குறைவது போன்ற காரணங்கள் எதனால் ஏற்படுகிறது என ஆராய்ந்து வருவதாக கூறினார்.

இணை நோய் இல்லாத இளைஞர்கள் கூட தற்போது கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் சுரஞ்சித் சட்டர்ஜி கூறுகையில், இது இரண்டாவது அலை வைரஸ் தொற்றால் தான், முதல் அலையில் இணை நோய் உள்ள முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால் இரண்டாவது அலையில் இளையவர்களே தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என கூறினார்.

18-44 வயதுடையவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்படும் என்ற அரசு அறிவிக்கும் வரை தடுப்பூசி போடப்படாதது இளம் வயதினர்தான். . பல இளைஞர்கள் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர்.

இளம் வயதினருக்கு ஏற்படும் அதிக பாதிப்புகளுக்கான உறுதியான காரணங்கள் இருந்தால் வரும் மாதங்களில் நடைபெறும் ஆய்வுகள் மூலம் கண்டறிய முடியும். ஊரடங்கு கடுமையாக இல்லாததால் இளைஞர்கள் வெளியே நடமாடுவது, வேலைக்கு செல்வது, சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வது போன்றவற்றால் முன்னெச்சரிக்கையை மீறிவிடுகின்றனர். இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Covid 19 Corona Second Wave
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment