காப்பி பிரியர்களுக்கு இந்த செய்தி மிகவும் முக்கியமாக இருக்கும். உலகத்தில் உள்ள டாப் 10 சிறந்த காப்பிகளில் இந்தியாவில் உள்ள பில்டர் காப்பி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
டேஸ்ட் அட்லஸ், என்பது உலகில் உள்ள சிறந்த உணவுகளை பற்றி தகவலை பகிரும் இணையதளமாக உள்ளது. இந்த இணையதளத்தில், உலகில் உள்ள டாப் 10 காப்பிகளில் ’கேப் குபனோ’ என்ற வகை காப்பிதான் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் பில்டர் காப்பி உள்ளது.
இந்தியாவில் அரபிக்கா மற்றும் ரோபஸ்டா வகை காப்பி பீன்ஸ் தென் இந்தியாவில் பயிரிடப்படுகிறது. இந்த காப்பி கொட்டைகள், அதிக அளவில் வறுக்கப்படுகிறது. அதன் பின்பாக நாம் இதை பில்டர் காப்பி பாத்திரத்தில் சேர்த்து, கொதிக்கும் தண்ணீரை சேர்க்கும் முறையை நாம் கண்டுபிடித்ததற்கு ஒரு பெரிய வரலாறு உள்ளது.
இந்நிலையில் முடிந்த வரை காப்பியின் மணத்தை மற்றும் பாலின் நுரையை நாம் சரியாக சேர்த்து கொள்வதால், அதன் சுவை அதிகரிக்கிறது. சாதாரண காப்பியைவிட பில்டர் காப்பியின் நிறம் மிகவும் அடர்த்தியாக இருக்கும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட காப்பி கொட்டைகளை நாம் சாதாரண காப்பி செய்வதற்கு பயன்படுத்துவோம். மேலும் ஸ்பெஷலான கிரவுண்ட் பீன்ஸை நாம் பில்டர் காப்பி செய்ய பயன்படுத்துவோம்.
ஸ்பெஷல் ரெசிபி
நாம் மேலே இருக்கும் பில்டரில் 3 டேபிள்ஸ் பூன் காப்பி பவுடரை கொட்ட வேண்டும். சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். டிக்காஷன் கிடைக்க 1 மணி நேரம் எடுக்கும்.தொடர்ந்து பாலை கொதிக்க வைத்து கப்பில் ஊற்றவும், அதில் டிக்காஷனை சேர்த்து கலக்க வேண்டும். தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.