நடப்பு ஆண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், உணவு ஆர்வலர்கள் அடுத்த ஆண்டு புதுவிதமான உணவுகளை சுவைப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், உலகின் சிறந்த உணவுகள் கிடைக்கும் இடங்களின் பட்டியல் டேஸ்ட் அட்லஸ் என வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் தனித்துவமாக கிடைக்கும் உணவுகள் குறித்து தற்போது காணலாம்.
பஞ்சாப்
பஞ்சாபி உணவுகளில் வெண்ணெய் மற்றும் நெய் ஆகியவை தாராளமாக பயன்படுத்தப்படும். தந்துரி வகை உணவுகள் இதன் சுவையை அதிகப்படுத்துகின்றன. பட்டர் சிக்கன், சர்சன் டா சாக் மற்றும் மக்கி டி ரொட்டி, சோலே பத்தூர், அமிர்தசாரி குல்ச்சா போன்ற உணவுகள் இங்கு பிரபலமானவை.
மேற்கு வங்கம்
மேற்கு வங்க உணவுகள் அதன் இனிப்பு மற்றும் கார வகைகளுக்காக பெயர்பெற்றவை. நுணுக்கமான சுவைகள் மற்றும் இணையற்ற இனிப்பு பாரம்பரியம் இவற்றை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. ஷோர்ஷே இலிஷ், கோஷா மங்ஷோ, மிஷ்டி டோய், சந்தேஷ் ஆகிய உணவுகள் பலராலும் விரும்பப்படுபவை
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா உணவுகள் காரம், இனிப்பு, கசப்பு என அனைத்திலும் சிறப்பானதாக இருக்கும். வடபாவ், பொலி, பாவ் பாஜி, மிசல் பாவ் ஆகியவை அனைத்தும் தனக்கென பிரத்தியேக சுவையை கொண்டுள்ளன.
தென்னிந்திய உணவுகள்
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளாவை உள்ளடக்கிய தென்னிந்திய உணவுகள் புவியியல் ரீதியாக தனித்துவத்தை கொண்டுள்ளன. எளிமையான காலை உணவில் தொடங்கி, பண்டிகை நாள்கள் வரை அனைத்து நிகழ்விற்கும் தனித்துவமான உணவுமுறையை கொண்டது தென்னிந்தியா. தோசை மற்றும் சாம்பார், ஹைதராபாதி பிரியாணி, செட்டிநாடு சிக்கன், பாயசம் ஆகியவை அனைவராலும் விரும்பப்படும் தென்னிந்திய உணவுகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“